தை பிறந்தால் வழி பிறக்கும் கவிதை.!

Advertisement

தை பிறந்தால் வழி பிறக்கும் !
” வலி மறைந்து வழி பிறக்கட்டும் “
தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்.!

Thai Piranthal Vazhi Pirakkum Quotes in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் தை பிறந்தால் வழி பிறக்கும் கவிதை பற்றி பின்வருமாறு கொடுத்துள்ளோம். முற்காலத்தில் எல்லாம் இப்போது இருப்பதுபோல் தார் சாலைகளும் சிமெண்ட் சாலைகளும் கிடையாது. அப்போதெல்லாம், மண் சாலைகள் தான் இருக்கும்.  அந்த சாலைகள் அனைத்தும் ஐப்பசி மாத அட மழையிலும், மார்கழி மாதத்தில் பெய்யும் பனியிலும் காணாமல் போகும். அதே பனி தை மாதத்தில் சற்று குறைவாக இருக்கும். பாதையும் நன்றாக தெரியும். எனவே தான் தை மாதம் பிறந்தால் பனியினால் மூடப்பட்ட வழி பிறக்கும் என்பதை தான் “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்று கூறினார்கள்.

அதேபோல், தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது உழவு தொழிலுக்கும் பொருந்தும். தை மாதம் அறுவடைக்கு ஏற்ற காலம் என்பதால் தை பிறந்தால் பொருள் ஈட்ட வழி பிறக்கும். அதேபோல், மார்கழி மாதத்தில் எந்த சுப காரியமும் செய்ய மாட்டர்கள். மார்கழிக்கு அடுத்து வரும் தையில் சுப நிகழ்ச்சிகளை செய்ய தொடங்குவார்கள். எனவே, இதன் காரணமாக தான் தை பிறந்தால் வழி பிறக்கும் என்றும் கூறுகிறார்கள்.

தை பிறந்தால் வழி பிறக்கும் கவிதை:

தை பிறந்தால் வழி பிறக்கும்
தரணி எல்லாம் வளம் செழிக்கும்
இனிக்கட்டும் உங்கள் வாழ்க்கை 
இனிக்கும் செங்கரும்பை போல
பொங்கல் வாழ்த்துக்கள்.! 

Thai Piranthal Vazhi Pirakkum Quotes

Thai Piranthal Vazhi Pirakkum Quotes in Tamil:

தை பிறந்தால் வழி பிறக்கும்
தடைகள் தகரும் 
தலைகள் நிமிரும் 
நிலைகள் உயரும் 
நினைவுகள் நிஜமாகும் 
கதிரவன் விழிகள் விடியலை கொடுக்கும்.!
இதயம் கனிந்த தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்.! 

Thai Piranthal Vazhi Pirakkum Quotes in Tamil

Thai Piranthal Vazhi Pirakkum Kavithai in Tamil:

தை பிறந்தால் வழி பிறக்கும்
அன்று உந்தன் கவி பிறந்தால் 
அணல் பறக்கும்
பொங்கல் பொங்கலோடு 
உங்கள் எண்ணமும் 
பொங்கிடட்டும்.! 
இதயம் கனிந்த தைத்திருநாள் வாழ்த்துக்கள்.! 

Thai Piranthal Vazhi Pirakkum Kavithai

Thai Piranthal Vazhi Pirakkum Quotes:

தை பிறந்தால் வழி பிறக்கும்
வாழ்வெங்கும் ஔி பிறக்கும்.
வீடெங்கும் பால்பொங்கி
மனம் எங்கும் மகிழ்வோங்கி.
நாமெல்லாம் ஒன்றாகி
நன்றிக்கு கடன் செலுத்தும்
திருநாளாம் இது தைத்திருநாளாம்

Thai Piranthal Vazhi Pirakkum Quotes

Thai Piranthal Vazhi Pirakkum Tamil Quotes:

தை பிறந்தால் வழி பிறக்கும்
எல்லா வலிகளும் கடந்து போகட்டும் 
அனைவரது உள்ளங்களிலும் 
மகிழ்ச்சி பொங்கட்டும் 
அன்பான உறவுகள் அனைவருக்கும் தை திருநாள் நல்வாழ்த்துக்கள்.!

Thai Piranthal Vazhi Pirakkum Tamil Quotes

Thai Piranthal Vazhi Pirakkum Quotes

இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–>  QUOTES IN TAMIL
Advertisement