தனிமை கவிதை வரிகள் | Thanimai Quotes in Tamil
வணக்கம் தனிமை என்பது ஒவ்வொருவரின் மனநிலையை பொறுத்தது. சிலருக்கு சுகமானதாக இருக்கும். சிலருக்கு மிகவும் கொடுமையானதாக இருக்கும்.. தனிமை நமது வாழ்வில் பலவகையான விஷயங்களை கற்றுக்கொடுக்கும். இத்தகைய தனிமையை அதிகம் நேசிக்கும் நண்பர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த பதிவில் தனிமை கவிதை வரிகள் மற்றும் தனிமை(Alone) கவிதை படங்களை பதிவு செய்துள்ளோம் அவற்றில் தங்களுக்கு பிடித்ததை டவுன்லோடு செய்து பயன் பெறுங்கள்.
தனிமை கவிதை:-
வாழ்க்கையில்
நான்
நினைத்தது
எதுவும்
கிடைக்காமல்
போகும் போதெல்லாம்
ஆதரவாய் வந்து
என்னிடம் ஆறுதல்
சொல்கிறது இந்த
தனிமை
தனிமை Quotes Whatsapp Status:
உறவுகள் எல்லாம் ஒதுங்கிக் கொள்ள.. என் உயிர் நட்பாக ஒட்டிக்கொண்டது தனிமை..
Alone/Thanimai Quotes in Tamil:-
வாழ்க்கை என்னும் வரைபடத்தில்
சந்தோஷம் என்னும் நதியை தொலைத்து,
கவலை என்னும் தீவில்,
கரை ஒதுங்கி நிற்கிறேன்.
ஒரு தனி மரமாக.
தனிமை கவிதை வரிகள்:
தனிமையை நினைத்து
கவலை கொள்ளாதே.
தனிமைதான் உலகத்தையும்
வாழ்க்கையையும் புரிய வைக்கும்.
தனிமை பற்றிய கவிதைகள்:-
தனிமை கொடுமை தான்,
இருந்தாலும்,
அதில் காயம் இல்லை,
காயப்படுத்த யாரும் இல்லை.
என்பதால், அது இனிமை தான்..!
தனிமை கவிதை:-
தனிமை என்பது வலி என்று யார் சொன்னது? தனிமை என்பது வழி.. நம்மை பற்றி நமக்கே புரிய வைக்கும் நிலை..
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |