தோழன் தோழி கவிதைகள் |
எத்தனை உறவுகள் இருந்தாலும் தோழன் ஒருத்தன் இருந்தால் போதும் இந்த உலகினை வென்றுவிடலாம். நாம் சோர்வடையும் போதெல்லாம் ஊக்கப்படுத்துபவர். நண்பன், தோழன், தோழிகள் எல்லாம் கடவுளுக்கே கிடைக்காத வரம். நாம் கஷ்டத்தில் இருக்கும் எல்லா நேரத்திலும் முதலில் வந்து உதவி செய்வது தோழன் தோழிகள் தான். தோழனுக்கும் தோழியும், தோழிக்கு தோழனும் துவண்டு போதெல்லாம் தோல் கொடுப்பார்கள்.
நாம் பெற்றோரிடம் சொல்ல முடியாத விஷயத்தையும் தோழன் தோழிகளிடம் சொல்லுவோம். கடவுளுக்கே கிடைக்காத தோழன் தோழிகளை பற்றி பொதுநலம்.காமில் சில கவிதை வரிகளை காண்போம்.
நட்பு கவிதை |
தோழன் கவிதை:
நூறு நண்பர்களை
தேடுவதை விட, நூறு ஆண்டு
நிலைத்து நிற்கும்
ஒரு நண்பனை தேடு..
உன்னை உச்சத்தில் வைக்கும்
அந்த நட்பு..!
தோழி பற்றிய கவிதைகள் | tholi kavithai in tamil:
சோகமாய் கலங்கி நின்றால் மடி கொடுத்து விடுவாள்
என் அன்னைக்கு அடுத்து என் தோழி..
தோழன் தோழி கவிதை:
ஆறுதல் சொல்ல தோழி இருந்தால்
அழுவதில் கூட
ஆனந்தம் உண்டு.
தூக்கி நிறுத்த தோழன் இருந்தால்
விழுவதில் கூட சுகம் உண்டு.
தோழன் தோழி கவிதை:
தோல் கொடுக்க தோழனும்,
தோல் சாய தோழியும்,
இருக்கும் வாழ்க்கை
கடவுள் உள்ளங்கையில்
இருப்பதற்கு சமம்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |