தூய்மை இந்தியா விழிப்புணர்வு வாசகங்கள்..!

thuimai india kavithai in tamil

சுற்றுச்சூழல் தூய்மை இந்தியா விழிப்புணர்வு வாசகங்கள்..!

நண்பர்களுக்கு வணக்கம்..! மக்களில் பலர் வசதியாக இருந்தாலும் தூய்மையாக இல்லாததால் தொற்று நோய்களுக்கு ஆட்படுகின்றனர். அதனால், பொது இடங்களில் புகை பிடித்தல், குப்பைகளை கண்ட இடங்களில் போடுதல், கண்ட இடங்களில் எச்சில் துப்புதல், கழிப்பறை செல்லுதல் போன்ற விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுவதால் நம்மைச் சுற்றியுள்ள பகுதி அசுத்தமாக அமைந்து அதனால் நோய் கிருமிகள் உருவாகி மக்களைப் பாதிக்கின்றன. எனவே இத்தகைய செயல்களை மாற்றுவது என்பது அனைவரது கைகளில் தான் இருக்கிறது. மக்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்த இந்த பதிவில் தூய்மை இந்தியா விழிப்புணர்வு வசனங்களை பதிவு செய்துள்ளோம். அவற்றை இப்பொழுது ஒவ்வொன்றாக படிக்கலாம் வாங்க..

தூய்மை இந்தியா விழிப்புணர்வு வாசகங்கள்..!

தூய்மையான பாரதம்
வளமான எதிர்காலம்..

சுத்தம் சுகாதாரம்
நித்தம் உருவாக்குவோம்

ஒரு நெகிழிப்பையின் சராசரி
ஆயுட்காலம் வெறும் 12
நிடங்கள் மட்டுமே..!
அதாவது அதனைக் கையில்
வாங்குவதற்கும் குப்பையில்
எறிவதற்கு இடையே உள்ள
நிமிடங்கள்..!
ஆனால் அந்த பை அழிவதற்கு
1000 ஆண்டுகள் ஆகுமாம்.
வெறும் 12 நிமிட
பயன்பாட்டிற்காக, நம்
தலைமுறையை அழிப்பதா..?

மகாத்மா கனவினை
மாண்புடன் நனவாக்குவோம்

தூய்மையான உலகத்திற்கு
பசுமையான இந்தியாவை
முன்னோடி ஆக்குவோம்.

தனிநபர் கழிப்பிடம்
அமைப்போம்
தன்னிகர் இல்லா
வாழ்வை வாழ்வோம்

நாம் தேசத்தின் துமைக்காக
100 மணி நேரத்தை செலவழிப்போம்

நாம் நம்மையும் நம் சுற்றுப்புறத்தையும்
நம் ஊரையும் நம் தேசத்தையும் தூய்மையாக
மாற்றம் செய்ய முயலுவோம்

கிராமங்களிலும் நகரங்களிலுருந்து
தூய்மை இந்தியாவை உருவாக்குவோம்

தூய்மையை தாய்மைக்கு நிகராக்குவோம்

தூய்மையான பாரதம்
வலிமைமிகு வரலாறு

குப்பைகளை போடமாட்டோம்
மண்ணை மலடாக்க மாட்டோம்

மண்வளம் காப்போம்
மழைவளம் பெறுவோம்

தூய்மைக்கு துணை நிற்போம்
வாய்மைக்கு குரல் கொடுப்போம்

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil