ஏர் பிடிப்பவன் தலை நிமிர உழவர்கள் அனைவருக்கும் இனிய உழவர் திருநாள் வாழ்த்துக்கள்
உழவர் திருநாள் கவிதைகள் | Uzhavar Thirunal Vazhthukkal in Tamil
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் உழவர் திருநாள் வாழ்த்துக்கள் கவிதைகளை கொடுத்துளோம். தொடர்ந்து நான்கு நாட்கள் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையில் இறுதியாக கொண்டாடப்படுவது தான் உழவர் திருநாள். இத்தினத்தில் விவசாயம் செய்யும் உழவர்களை நினைவு கூர்ந்து அவர்களுக்கு நன்றிகளையும் வாழ்த்துக்களையும் செலுத்தும் விதமாக, உங்களின் அன்பினை வாழ்த்து படங்கள் மூலம் அனுப்புங்கள்.
இந்த ஆண்டு 2025 ஜனவரி 16 ஆம் தேதி (தை 03) உழவர் திருநாள் வருகிறது. அன்றைய தினம் அணைத்து உள்ளவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்க மறக்காதீர்கள். ஏனென்றால் அவர்கள் சேற்றில் கை வைத்தால் தான் நாம் சோற்றில் கை வைக்க முடியம். ஆகையால், உழவர் திருநாளில் உங்களின் அன்பான வாழ்த்துக்களை தெரிவியுங்கள்.
Ulavar Thirunal Images:
மண்ணிலும் , மனதிலும்
விதைகளை விதைத்து
உயிரை உரமாக்குபவர்க்கு
இனிய உழவர்கள் தின நல்வாழ்த்துக்கள்
Ulavar Thirunal Wishes in Tamil:
தினம் சோற்றில் கை வைக்க
சேற்றில் கால் வைக்கும் உழவர்களை
நன்றியுடன் நினைவு கூர்வோம்
அவர் வாழ்வு வளம்பெற
முயற்சி மேற்கொள்ளும் உறுதிபூண்டு
உழவர் திருநாளை கொண்டாடுவோம்
இனிய உழவர் தின நல்வாழ்த்துக்கள்.!
Iniya Ulavar Thirunal Wishes in Tamil:
உழவனின் உழைப்பை போற்றும் பெருநாள் ..!
உழவனுக்கு நன்றி செலுத்தும் உழவர் திருநாள் ..!
விவசாயத்தின் பெருமையை உணர்த்தும் இயற்கை திருநாள் ..!
கால்நடைகளுக்கு நன்றி சொல்லி
சீறி வரும் காளையை திமிருடன் அடக்கும் தமிழர் திருநாள் ..!
Uzhavar Thirunal Quotes in Tamil:
உழவர் திருநாள்
தை பொங்கல் பெருநாள்
உழுது உண்டு வாழ்வோர்
களத்து மேடு சென்று
புதிர் எடுத்து
பொங்கல் இட்டு
பகலவனை தொழுது
படையல் இட்டு
தினை குழைந்து
பகிர்ந்தளித்து
செய்நன்றி செலுத்தும்
நன்னாளில்
அனைவருக்கும்
வாழ்த்துக்கள் கூறும்.
Uzhavar Thirunal Vazhthukkal in Tamil:
வயலில் உழுது, நாற்று நட்டு, களை எடுத்து, உரமிட்டு, நீர்ப் பாய்ச்சி, கண்ணின் கருமணி போலப் பாதுகாக்கின்ற உழவனின் பெருமையை சொல்ல ஒரு உகந்த நாள் தான் உழவர் திருநாள்.
Uzhavar Thirunal Kavithai in Tamil:
உழவர் திருநாள் அன்று, உழவர்களுக்கு நன்றியையும், வாழ்த்துக்களையும் மனமார கூறுவோம். அனைவருக்கும் உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்.!
Iniya Ulavar Thirunal Wishes in Tamil:
உழவர் திருநாள் வாழ்த்துக்கள் :
விவசாயிகள் அனைவருக்கும் இனிய உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்.!
Iniya Ulavar Thirunal Wishes in Tamil:
“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின் செல்வார்”
இத்தகு உயர்ந்த மதிப்பிற்குரியவர்கள் உணவை விளைவித்துத் தரும் உழவர்கள்!
நெற்றி வியர்வை நிலத்தில் விழ,
உழைத்து உழைத்து கரங்கள் உரமேறி இருக்க,
கலயத்தில் கஞ்சியுடன் காததூரம் நடந்து,
காளைகளை விரட்டி கழினியிலே ஏர் ஓட்டி,
உழவு வேலைகள் செய்து,
உருப்படியாய் நெல்மணிகளை களத்துமேட்டில் கொண்டு சேர்க்கும்
உயர்ந்தவரே உழவர்கள்!
ஏரோட்டிகளைப் பாராட்டி உளம் குளிரச் செய்வதே உழவர் திருநாள்!
உழவர்களுக்கும் அவர்களது உழைப்பிற்கு உறுதுணையாய் இருப்பவர்களுக்கும் நன்றி தெரிவித்து அதன் வாயிலாக அவர்களது நல்ஆசிகளை நாம் பெறுவதற்கு ஏதுவாக நாம் கொண்டாடுவதே உழவர் திருநாளாகும்.
இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> | QUOTES IN TAMIL |