உறவின் உயர்வு kavithai in tamil

Advertisement

Uravin Uyarvu Kavithai in Tamil

எல்லாருடைய வாழ்க்கையில் உறவுகள் என்பவர்கள் இருப்பார்கள். நமக்கு ஒஒரு நல்லது நடந்தால் சந்தோசமாக இருப்பது நம்முடைய அம்மா, அப்பா தான். இவர்கள் மகிழ்ச்சிஅடைவதோடு இல்லாமல் நம்முடைய சித்தி சித்தப்பா போன்ற உறவினர்களும் சந்தோசம் அடைவார்கள். சந்தோசம் மட்டுமில்லை நமக்கு கஷ்டம் என்றாலும் அவர்கள் துடித்து விடுவார்கள். இந்த உறவுகள் எல்லாம் கிடைத்தது நமக்கு வரம் தான். நமக்கு இருக்கும் எல்லா உறவுகளும் இப்படி இருப்பார்களா என்று கேட்டால் இல்லை. சில உறவுகள் மட்டுமே நமக்காக துடிக்க கூடியதாக இருக்கும்.  அப்படிப்பட்ட உறவுகள் கிடைத்திருந்தால் நாம் பாக்கியசாலி தான். சில  உறவுகளை பற்றி சொன்னால் சொல்லி கொண்டே போகலாம். இந்த பதிவில் உறவுகளின் உயர்வை கவிதைகள் மூலம் கொடுத்துள்ளோம். அதனைDownload செய்து உங்களின் உயர்வான உறவுகளுக்கு Send செய்யுங்கள்.

உறவின் உயர்வு கவிதை:

உறவுகள் பல இருந்தாலும்,
நாம் வாழ்ந்தால் மகிழ்வதும்,
வீழ்ந்தால் அழுவதும்
சில உறவுகள்
நம்மை  உலகமே
கைவிட்டு சென்றாலும்
நமக்காக நம்மோடு பயணிக்கும்
சில உறவுகள் அழகானது

சில உறவுகள் மட்டுமே நமக்கு ஒன்று என்றவுடன் துடிக்கும்
அந்த உறவுகளின் அன்பு ஆழமானது

uravin uyarvu quotes in tamil

சில உறவுகள் நம் கோடா இல்லாமல் இருக்கலாம்,ஆனால் அவர்களின் உணர்வுகள் எப்போதும் நமக்காக துடிக்கும்.

பணத்திற்காக தேடி வரும் உறவானது அவர்களுக்கு பணம் தேவையில்லை என்ற போது நம்மை ஒதுக்கி விடுகிறது
பாசத்திற்காக வரும் உறவுகள் நாம் எந்த நிலையில் இருந்தாலும் நம்முடன் சேர்ந்து பயணிக்கிறது

நம்முடைய மனமானது மகிழ்ச்சியாக இருக்கும் போது உறவுகளை தேடாது.
கஷ்டத்தில் இருக்கும் போது ஆறுதல் தேடுவதற்கு உறவுகளை தேடுகிறது, அப்படி நம் கண்ணீரை துடைப்பதற்கு வரும் உறவுகள் உயர்ந்தது

சில உறவுகள் மறைந்தாலும் நம் உணர்வில் வாழ்கிறது

தாயின் கருவறையில் இருந்து வராமல் நமக்காக ஒரு உறவு துடிக்கிறது என்றால் அவை நமக்கு வரம் தான்.

உறவுகளின் வலி கவிதை

இதுபோன்று கவிதைகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Quotes
Advertisement