ஆடிப்பெருக்கு ஸ்பெஷல் அரிசி தேங்காய் பாயாசம் சுவையாக இப்படி செய்யுங்க..!

Advertisement

Arisi Thengai Payasam Recipe 

பொதுவாக சைவ உணவுகளில் அணைவருக்கும் பிடித்த ஒன்று என்றால் அது பாயாசம் தான். ஏனென்றால் இதனின் இனிப்பு சுவையும், ருசியும் ஆனது ஒருவரை வேண்டாம் என்று கூற வைக்காமல் கேட்டு வாங்கி சாப்பிட தூண்டக்கூடிய ஒன்றாக உள்ளது. அந்த வகையில் பார்த்தால் பாயாசத்தில் அரிசி பாயாசம், பால் பாயாசம், சேமியா பாயாசம், இளநீர் பாயாசம், பருப்பு பாயாசம் மற்றும் ஜவ்வரசி பாயாசம் என பல வகைகள் உள்ளது. இதில் பல வகைகள் இருந்தாலும் கூட நமது வீட்டில் என்னவோ பெரும்பாலும் சுபநிகழ்ச்சி நடக்கும் நாட்களில் சேமியா பாயாசத்தினை மட்டும் தான் வைப்பார்கள். அந்த வகையில் இந்த வருட ஆடிப்பெருக்கின் ஸ்பெஷல் ஆகா அரிசி தேங்காய் பாயாசம் செய்வது எப்படி என்பதை இந்த பதிவின் வாயிலாக கற்றுக்கொண்டு செய்து அசத்தலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

அரிசி தேங்காய் பாயசம்:

  1. பச்சை அரிசி- 1 கப் 
  2. துருவிய தேங்காய்- 1/2 கப் 
  3. வெல்லம்- 1/2 கப் 
  4. காய்ச்சிய பால்- 1/2 கப் 
  5. முந்திரி- தேவையான அளவு 
  6. திராட்சை- தேவையான அளவு 
  7. ஏலக்காய்- 3
  8. உப்பு- சிறிதளவு
  9. நெய்- 2 ஸ்பூன் 

அரிசி தேங்காய் பாயாசத்தினை செய்வதற்கு முதலில் மேற்கூறியுள்ள பொருட்கள் அனைத்தினையும் எடுத்து தனியாக வைத்து விடுங்கள்.

பீட்ரூட்ல பக்கோடாவா… ஆச்சரியமா இருக்கா செஞ்சு சாப்பிட்டு பார்க்கலாம் வாங்க.

அரிசி தேங்காய் பாயாசம் செய்வது எப்படி..?

முதலில் எடுத்துவைத்துள்ள பச்சை அரிசியினை முதல் நாள் இரவே அல்லது 1/2 மணி நேரம் தண்ணீரில் ஊறவித்து விட வேண்டும். அதன் பிறகு ஊறவைத்துள்ள அரிசியில் இருக்கும் தண்ணீரை வடிகட்டி கொள்ள வேண்டும்.

இப்போது வடிகட்டிய அரிசியை மிக்சி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்து ஒரு பவுலில் வைத்து கொள்ளவும். அடுத்து மிக்சி ஜாரில் துருவிய தேங்காய் 1/2 கப் மற்றும் ஏலக்காய் சேர்த்து நன்றாக நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

 அரிசி தேங்காய் பாயசம்

அடுத்து எடுத்துவைத்துள்ள வெல்லத்தினை சிப்ஸ் சீவும் கட்டையில் வைத்து நன்றாக சீவிக் கொள்ள வேண்டும்.

இதனை தொடர்ந்து அடுப்பில் ஒரு கடாயினை வைத்து அதில் நெய் சேர்த்து முந்திரி மற்றும் திராட்சையினை பொன் நிறமாக வறுத்து தனியாக வைத்து கொள்ளுங்கள்.

இதன் பின்பு அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரத்தில் அரைத்து வைத்துள்ள அரிசி மற்றும் தேங்காய் சேர்த்து அதனுடன் 1/2 கப் அளவில் தண்ணீரையும் சேர்த்து கலந்து கொண்டே இருக்கவும்.

ஒரு 10 நிமிடம் கழித்த பிறகு துருவி வைத்துள்ள வெல்லம் மற்றும் சிறிதளவு உப்பினை அதில் சேர்த்து மீண்டும் 5 நிமிடம் வரை கலந்து கொண்டே இருக்கவும்.

5 நிமிடம் கழித்த பிறகு காய்ச்சிய வைத்துள்ள பால், வறுத்த முந்திரி மற்றும் திராட்சையினை அதில் சேர்த்து ஒருமுறை கலந்து இறக்கினால் போதும் சுவையான மற்றும் வாசனையான ஆடிப்பெருக்கு ஸ்பெஷல் அரிசி தேங்காய் பாயாசம் ரெடி.

ஒரு முறை சோயா பெப்பர் பிரை இப்படி செஞ்சு பாருங்க

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil
Advertisement