Broccoli Recipe in Tamil
பொதுவாக நாம் அனைவரும் நம்முடைய நாக்கின் சுவை மற்றும் பசிக்கு ஏற்றவாறு நிறைய வகையான உணவுகளை சாப்பிடுவோம். அத்தகைய உணவுகளில் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்று என்றால் அது காலிபிளவர் தான். இந்த காலிபிளவரில் வறுவல், கிரேவி, 65 என நிறைய ரெசிபிக்களை சாப்பிட்டு இருப்போம். ஆனால் காலிபிளவரை போலவே அளவிலும், ருசியிலும் மற்றொன்று இருக்கிறது அது தான் பரோக்கோலி. ஆனால் ப்ரோக்கோலி நிறைய வகையான ரெசிபிக்களை வீட்டில் செய்துசாப்பிடுவது என்பது கொஞ்சம் கஷ்டமாக தான் இருக்கும். ஹோட்டலில் சாப்பிடுவதும் உடலுக்கு அவ்வளவு நன்மைகளை அளிப்பது இல்லை. ஆகவே இன்றைய பதிவில் ப்ரோக்கோலியில் உள்ள ஒரு ரெசிபியான தந்தூரி ப்ரோக்கோலி வீட்டிலேயே செய்வது எப்படி என்று தெரிந்துக்கொள்ளலாம் வாங்க ப்ரிண்ட்ஸ்..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
தந்தூரி ப்ரோக்கோலி:
- ப்ரோக்கோலி- 1
- தயிர்- 1 கப்
- இஞ்சி பூண்டு பேஸ்ட்- 1 ஸ்பூன்
- மஞ்சள்தூள்- 1/2 ஸ்பூன்
- மிளகாய்த்தூள்- 2
- தனியாத்தூள்- 1 ஸ்பூன்
- சீரகம் தூள்- 1 ஸ்பூன்
- மசாலா பொடி- 1 ஸ்பூன்
- எலுமிச்சை சாறு- 1/2 ஸ்பூன்
- கசூரி மேத்தி- 1 ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- எண்ணெய்- தேவையான அளவு
தந்தூரி ப்ரோக்கோலி செய்வதற்கு மேலே சொல்லப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தினையும் சரியான அளவில் எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
How to Make Tandoori Broccoli:
முதலில் 1 பெரிய ப்ரோக்கோலியை எடுத்துக்கொண்டு அதனை சுத்தம் செய்து சிறு சிறு துண்டாக நறுக்கி கொள்ளுங்கள். அதன் பிறகு கடாயில் தண்ணீர் சேர்த்து அதனுடன் ப்ரோக்கோலியை நன்றாக வேக விடுங்கள்.
ப்ரோக்கோலி நன்றாக வெந்த பிறகு அதில் இருக்கும் தண்ணீரை வடிகட்டி வைத்து விடுங்கள். இப்போது ஒரு பவுலை எடுத்துக்கொள்ளுங்கள்.
அதன் பிறகு அந்த பவுலில் தண்ணீர் இல்லாத கெட்டியான தயிரை சேர்த்து அதனுடன் எடுத்துவைத்துள்ள மசாலா பொருட்கள் மற்றும் இஞ்சி பூண்டு விழுதினையும் சேர்த்து 2 நிமிடம் வரை கலந்து கொள்ளுங்கள்.
2 நிமிடம் கழித்து பவுலில் உள்ள பொருளுடன் தேவையான அளவு உப்பு, 1/2 ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் கசூரி மேத்தி 1 ஸ்பூன் சேர்த்து அனைத்தும் ஒன்றுடன் ஒன்றாக வரும் வரை கலந்து 10 நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள்.
10 நிமிடம் கழித்த பிறகு தயார் செய்து வைத்துள்ள மசாலா பேஸ்டுடன் வேக வைத்து வைத்துள்ள ப்ரோக்கோலியை சேர்த்து நன்றாக கலந்து 1/2 மணி நேரம் அப்படியே வைக்க வேண்டும்.
கடைசியாக 1/2 மணி நேரம் கழித்து அடுப்பில் ஒரு கடாயினை வைத்து கடாய் சூடானது அதில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து அதன் பிறகு மசாலா தடவி வைத்துள்ள ப்ரோக்கோலியை இதில் சேர்த்து முன்னும், பின்னுமாக சேர்த்து மீன் வறுவல் போல் வறுத்து கொள்ள வேண்டும்.
அவ்வளவு தாங்க சுவையான தந்தூரி ப்ரோக்கோலி சுட சுட தயார் ஆகிவிட்டது. ஈவ்னிங் நேரத்துல இதை செஞ்சு குடுங்க வீட்டில் உள்ளவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.
முட்டையில் ஒரு முறை இப்படி கிரேவி செஞ்சு பாருங்க..
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |