தேங்காய் புளி துவையல்
நண்பர்களே வணக்கம்..! பொதுவாக நாம் அனைவருமே வீட்டில் நிறைய வகையாக உணவுகளை சாப்பிட்டது உண்டு. ஆனால் இது மாதிரி ஒரு துவையல் செய்து சாப்பிட்டது உண்டா..? அது என்ன துவையல் என்று நினைப்பீர்கள். அது தான் தேங்காய் புளி துவையல். இதனை நாம் சாதத்திலும் சேர்த்து சாப்பிடலாம். புளி சாதம் தயிர் சாதம் என இதுபோன்ற சாதத்தில் சேர்த்து சாப்பிடலாம். இதன் சுவையானது புளிப்பாகவும் தேங்காய் சுவையும் தனியாக தெரியும். அதேபோல் அதற்கு ஏற்ற துவையலும் சேர்த்து சாப்பிடலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
தேங்காய் புளி துவையல்:
தேவையான பொருட்கள்
- மிளகு
- சீரகம்
- கடுகு
- பூண்டு
- வரமிளகாய்
- புளி
- தேங்காய்
- எண்ணெய்
செய்முறை:
ஒரு கடாய் எடுத்துகொள்ளவும். அதில் 1 ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி அதில் மிளகு 1 ஸ்பூன், சீரகம் 1 ஸ்பூன் அளவு சேர்த்து சிறிது நேரம் வதங்கியதும், அதன் கூடவே 15 பல் பூண்டு சேர்த்து, 1 கப் தேங்காய், 1 கொத்து கருவேப்பிலை சேர்த்துக் கொள்ளவும். அதன் பின்பு 3 வரமிளகாய், கொஞ்சம் புளி சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
அதன் பின்பு அதனை மிக்சி ஜாரில் சேர்த்து அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். அதன் பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு போட்டு பொரிந்தவுடன், கருவேப்பிலை போட்டு அதனை எடுத்து துவையலில் சேர்த்து கலந்து இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி சேர்த்து சாப்பிடலாம். அதேபோல் சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம் சுவையாக இருக்கும்.
உருளைக்கிழங்கில் இந்த மாதிரி சீஸ் பால்ஸ் செஞ்சி சாப்பிட்டு இருக்கீங்களா
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |