ஆடிப்பெருக்கு ஸ்பெஷல் காப்பரிசியை இப்படி செஞ்சு பாருங்க..

Advertisement

ஆடி பெருக்கு காப்பரிசி | காப்பரிசி செய்வது எப்படி

பொதுவாக பண்டிகை என்றாலே உணவு தான் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. எடுத்துக்காட்டாக தீபாவளி என்றால் நிறைய பலகாரங்கள் செய்வார்கள். தீபாவளி வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னரே உங்க வீட்டில் என்ன பலகாரம் செய்ய போகிறீர்கள் என்று மாற்றி மாற்றி கேட்டு கொள்வார்கள். அது போல புதிது புதிதாக பலகாரம் செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். அது போல நாளைய தினம் ஆடிப்பெருக்கு அன்றைய தினம் என்ன செய்வது என்று யோசித்து கொண்டிருப்பீர்கள். அதனால் தான் இன்றைய பதிவில் காப்பரிசி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ள போகின்றோம்.

காப்பரிசி செய்யும் முறை | Kapparisi Recipe in Tamil:

காப்பரிசி செய்ய தேவையான பொருட்கள்:

  • பச்சரிசி- 1 கப்
  • நெய்- 1 தேக்கரண்டி
  • தேங்காய் கீறியது- 1 கப்
  • வெல்லம்- 1 கப்
  • கருப்பு எல்- 2 தேக்கரண்டி
  • பொட்டு கடலை- 2 தேக்கரண்டி

பீட்ரூட்ல பக்கோடாவா..! ஆச்சரியமா இருக்கா செஞ்சு சாப்பிட்டு பார்க்கலாம் வாங்க..!

காப்பரிசி செய்முறை:

ஆடிப்பெருக்கு காப்பரிசி

  • முதலில் ஒரு டம்ளர் பச்சரிசியை எடுத்து கழுவி விட்டு தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். அரிசி எந்த அளவிற்கு ஊறுகின்றதோ அந்த அளவிற்கு சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும்.
  • அரிசி ஊறிய பிறகு தண்ணீரை வடிக்கட்டி கொள்ளவும். பிறகு இதனை ஒரு தாம்பூலத்தில் காட்டன் துணியை வைத்து வடிகட்டிய அரிசியை சேர்த்து ஒரு மணி நேரம் காய வைக்கவும்.
  • அடுத்து அடுப்பில் கடாய் வைத்து ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றி கொள்ளவும். அதில் 1 கப் தேங்காய் கீறி வைத்துள்ளதை சேர்த்து வதக்கி தனியாக எடுத்து கொள்ளவும். பின் அதிலேயே எல் 2 தேக்கரண்டி சேர்த்து அதனையும் வதக்கி கொள்ளவும்.
  • அடுத்து எந்த டம்ளரில் அரிசியை எடுத்தீர்களோ அதே டம்ளரில் வெல்லம் எடுத்து கொள்ளவும். அதனை கடாயில் சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி பாகுவாக காய்த்து கொள்ளவும்.
  • பிறகு ஒரு பாத்திரத்தை எடுத்து கொள்ளவும், அதில் காய வைத்த பச்சரிசி, 1 டம்ளர் பொட்டு கடலை, வறுத்த எல் மற்றும் தேங்காய், 2 ஏலக்காயை நச்சு எடுத்ததையும் சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும். அதனுடனே வெல்ல பாகுவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும். அரிசியானது உதிரி உதிரியாக இருக்க வேண்டும்.

ஒரு முறை சோயா பெப்பர் பிரை இப்படி செஞ்சு பாருங்க

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil

 

Advertisement