Aloo Palak Gravy Recipe in Tamil
தினமும் இட்லி, தோசை சாப்பிட்டால் கூட அழுத்து போய்விடும். ஆனால் சப்பாத்தி மற்றும் பூரி என்பது அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்றாக தான் இருக்கிறது. ஆகையால் இந்த இரண்டு ரெஸிபிகளையும் எப்போது செய்தாலும் வேண்டாம் என்று சொல்லி மறுக்கலாம் சாப்பிடும் நபர்களே அதிகமாக இருக்கிறார்கள். அப்படி பார்த்தால் சப்பாத்திக்கு சைடிஷாக சிக்கன், மட்டன், பன்னீர், காளான் மற்றும் இறால் என இதுபோன்ற கிரேவி வகைகளை சாப்பிடுவது வழக்கமான ஒன்று. இதன் படி பார்க்கையில் சப்பாத்தி என்றால் இந்த கிரேவி வகைகள் தான் என்பது ஒரு மெனு கார்டாகவே இருக்கிறது. அதனால் இன்று சப்பாத்திக்கு சற்று வித்தியாசமான ஆலு பாலக் கிரேவி செய்து எப்படி என்பதை தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
ஆலு பாலக் கிரேவி கிரேவி செய்முறை:
பொருட்களின் அளவு | செய்முறை விளக்கம் |
எண்ணெய்- தேவைக்கு ஏற்ற | முதலில் அடுப்பி ஒரு கடாயினை வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் சேர்க்க வேண்டும். |
பட்டை, கிராம்பு, பிரியாணி இலை- சிறிது | இப்போது கடாயில் உள்ள எண்ணெயுடன் இவற்றை எல்லாம் சேர்த்து கொள்ளுங்கள். |
சீரகம், ஏலக்காய்- சிறிது | அடுத்து கடாயில் உள்ள பொருளுடன் இவற்றையும் சேர்த்து நன்றாக பொரிய விடுங்கள். |
வெங்காயம், தக்காளி – 2 | அதன் பிறகு வெங்காயம், தக்காளி மற்றும் காய்ந்த மிளகாயினை சேர்த்து நன்றாக 5 நிமிடம் வரை வதக்க வேண்டும். |
காய்ந்த மிளகாய்- 2 | |
பூண்டு- 4 | 5 நிமிடம் கழித்து பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி சேர்த்து மீண்டும் நன்றாக வதக்க வேண்டும். |
பச்சை மிளகாய்- 2 | |
இஞ்சி- சிறிது | |
உருளை கிழங்கு- 3 | அடுத்தபடியாக 3 உருளைக்கிழங்கை சிறிது சிறிதாக நறுக்கி வெங்காயத்துடன் சேர்த்து 10 நிமிடம் வரை வேக விடுங்கள். |
மிளகாய் தூள்- 1 ஸ்பூன் | 10 நிமிடம் கழித்து மசாலா தூள், தேவையான அளவு உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக உருளை கிழங்கை வேக விடுங்கள். |
மல்லி தூள்- 1 | |
தண்ணீர்- சிறிதளவு | |
பாலக்கீரை- 1 கப் | பின்பு நறுக்கிய பாலக்கீரையினை உருளைக்கிழங்குடன் சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு வேக விடுங்கள். |
ஆலு பாலக் கிரேவி தயார் | கீரை நன்றாக வெந்த பிறகு சிறிது கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து இறக்கினால் ஆலு பாலக் கிரேவி தயார். |
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள்!!! |