ஆலு பரோட்டா
பரோட்டா என்றால் யாருக்கு தான் பிடிக்காது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒரு உணவு என்றே சொல்லலாம். கொத்து பரோட்டா, முட்டை பரோட்டா, சில்லி பரோட்டா, சிலோன் புரோட்டா, மலபார் புரோட்டா, காயின் புரோட்டா, வீச்சு புரோட்டா, லாபா புரோட்டான்னு ஒரு லிஸ்டே இருக்கு. பரோட்டா எல்லோருக்கும் பிடித்த உணவு என்றாலும் அதை செய்வது கடினம் என்று யாரும் வீட்டில் செய்து கொடுப்பதில்லை. ஆனால் பலருக்கும் தெரியாது இதை வீட்டிலேயும் மிக எளிதாக செய்து விடலாம் என்று. அந்த வகையில் இந்த தொகுப்பில் வீட்டிலேயே எப்படி ஆலு பரோட்டா செய்யலாம் என்பதை இந்த பதிவின் மூலம் பார்க்கலாம் வாருங்கள்.
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு – 3 கப்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 டீஸ்பூன்
உருளைக்கிழங்கு – 5 ( வேகவைத்து மசித்தது)
இஞ்சி விழுது – 1 தேக்கரண்டி
மிளகாய் – 2
கொத்தமல்லி -சிறிதளவு
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
சீரக தூள் – ½ தேக்கரண்டி
கரம் மசாலா – ½ தேக்கரண்டி
தண்ணீர்
ஆலு பரோட்டா செய்முறை:
ஆலு பரோட்டா மாவு தயாரிக்கும் முறை:
ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு கோதுமை மாவை எடுத்து அதற்கு தேவையான உப்பு சேர்த்து தேவைக்கு ஏற்ப சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து பிசையவும்.
தண்ணீருடன் சிறிதளவு எண்ணெய் சேர்த்துகொள்ளவது நல்லது.
பரோட்டா பதத்திற்கு மாவு வந்ததும் அதனை 20 நிமிடங்கள் முடி வைக்கவும்.
ஆலு தயாரிக்கும் முறை:
ஒரு பாத்திரத்தில் வேகவைத்து வைத்துள்ள உருளைக்கிழங்கு, இஞ்சி விழுது, நறுக்கிய மிளகாய், சிறிதளவு கொத்தமல்லி மற்றும் தேவையான அளவு மிளகாய் தூள், சீரக தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
உருளைக்கிழங்கை வைத்து செய்யக்கூடிய ஒரு காரசாரமான கர்நாடக ஸ்பெஷல் ரெசிபி ஜீரா ஆலு….
ஆலு பரோட்டா செய்முறை:
இப்போது பிசைந்து வைத்துள்ள மாவை நன்றாக உருட்டி பந்து போல் உருட்டி நன்றாக தேய்த்த பின்னர் தயாரித்து வைத்துள்ள ஆலுவை மாவின் மையத்தில் வைத்து நன்றாக அனைத்து பகுதிக்கும் செல்லுமாறு மாவை தேய்த்து எடுத்து கொள்ளவும்.
பின்னர் சூடான தவாவில் எண்ணெய் சேர்த்து அதனுடன் உருட்டிய பரோட்டாவை நன்றாக வேகும் படி இரண்டு பக்கங்களும் திருப்பி திருப்பி வேக வைக்கவும்.
இப்போது சுவையான ஆலு பரோட்டா தயார்.
கோதுமை மாவு இருந்தால் போதும் வித்தியாசமான பூரி ரெபிசி இப்படி செய்யலாம்..!
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள்!!! |