சில்லி சிக்கன் குழம்பு ஆந்திரா ஸ்டைலில் நாவிற்கு சுவைத்தரும் பதத்தில் செய்யலாம் வாங்க..!

Advertisement

Andhra Chilli Chicken Gravy Recipe  

நாம் அனைவரும் சிக்கன் சாப்பிட்டு இருப்போம். அதிலும் குறிப்பாக சிக்கன் குழம்பு, வறுவல், மிளகு வறுவல், சுக்கா, கிரேவி மற்றும் பக்கோடா என பல வகையான ரெசிபிக்களை சாப்பிட்டு இருப்போம். ஆனால் ஆந்திரா ஸ்டைலில் சில்லி சிக்கன் கிரேவி சாப்பிட்டு இருக்கிறீர்களா..? ஒருவேளை நீங்கள் இந்த ரெசிபியை சாப்பிட்டது இல்லை என்றால் அதை எப்படி வீட்டிலேயே சுவையாக செய்வது என்று இன்றைய பதிவில் தெரிந்துக்கொள்ளுங்கள். சரி வாங்க நண்பர்களே சில்லி சிக்கன் கிரேவி பற்றிய முழு விவரத்தையும் பார்க்கலாம்..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

சில்லி சிக்கன் கிரேவி:

  1. சிக்கன்- 1/2 கிலோ 
  2. பெரிய வெங்காயம்- 2
  3. தக்காளி- 2
  4. மிளகாய் தூள்- 1/2 ஸ்பூன்
  5. இஞ்சு பூண்டு பேஸ்ட்- 1 1/4 ஸ்பூன் 
  6. மஞ்சள் தூள்- 1/4 ஸ்பூன் 
  7. மல்லி தூள்- 3/4 ஸ்பூன் 
  8. சோம்பு- 1 ஸ்பூன் 
  9. தேங்காய்- 1 கப் 
  10. கிராம்பு- 3
  11. பட்டை- 2
  12. பிரியாணி இலை- 1
  13. கறிவேப்பிலை- தேவையான அளவு 
  14. கொத்தமல்லி- தேவையான அளவு 
  15. உப்பு- தேவையான அளவு 
  16. எண்ணெய்- தேவையான அளவு 

மசாலா அரைக்க தேவையான பொருள்:

  • மிளகாய்- 5
  • பூண்டு- 5 பற்கள் 
  • சோம்பு- 1 ஸ்பூன் 
  • சீரகம்- 1 ஸ்பூன் 
  • காய்ந்த மிளகாய்- 3
  • பச்சை மிளகாய்- 15
  • நறுக்கிய பெரிய வெங்காயம்- 1

ஆந்திரா ஸ்டைல் மீன் வறுவல் அப்பப்பா என்னா சுவை 

சில்லி சிக்கன் கிரேவி செய்முறை:

முதலில் எடுத்துவைத்துள்ள சிக்கன், வெங்காயம், பச்சை மிளகாய்  மற்றும் தக்காளி நறுக்கி வைத்து கொள்ளுங்கள்.

அதன் பிறகு ஒரு மிக்சி ஜாரில் மசாலா அரைப்பதற்கு எடுத்துவைத்துள்ள பொருட்களை அதில் சேர்த்து நன்றாக பேஸ்ட் போல அரைத்து ஒரு பவுலில் வைத்து விடுங்கள். அதேபோல் 1 கப் துருவிய தேங்காயையும் அரைத்து விடுங்கள்.

சில்லி சிக்கன் கிரேவி செய்முறை

இப்போது அடுப்பில் ஒரு கடாயினை எண்ணெய் சேர்த்து எண்ணெயினை காய விடுங்கள். என்னை நன்றாக காய்ந்ததும் சீரகம் மற்றும் பட்டை, கிராம்பு, பிரியாணி இலை என இவற்றை சேர்த்து 2 நிமிடம் பொரிய விடுங்கள்.

2 நிமிடம் கழித்து கடாயில் உள்ள பொருளுடன் வெங்காயம் மற்றும் தக்காளியினை சேர்த்து நன்றாக பொன் நிறமாக வரும் வரை வதக்கி கொள்ளுங்கள்.

அடுத்து கடாயில் உள்ள பொருளுடன் சுத்தம் செய்து வைத்துள்ள சிக்கனை சேர்த்து அதனுடன் இஞ்சு பூண்டு பேஸ்ட், தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீரை சேர்த்து 2 நிமிடம் கலந்து விடுங்கள்.

2 நிமிடம் கழித்து கடாயில் உள்ள சிக்கனுடன் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து சிக்கனை நன்றாக வேக விடுங்கள். சிக்கன் நன்றாக வெந்த பிறகு கடைசியாக அரைத்து வைத்துள்ள தேங்காயினை சேர்த்து மீண்டும் 2 நிமிடம் கொதிக்க விடுங்கள்.

இப்போது அடுப்பில் உள்ள சில்லி சிக்கன் கிரேவியை இறக்கி விடுங்கள். அவ்வளவு தாங்க சில்லி சிக்கன் அதுவும் ஆந்திரா ஸ்டைலில் தயார்.

ஆந்திரா ஸ்பெஷல் கொண்டா ரெட்டி சிக்கன் பிரியாணி செய்வது எப்படி

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil
Advertisement