வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ஆந்திரா ஸ்டைல் மீன் வறுவல் அப்பப்பா என்னா சுவை.!

Updated On: July 14, 2023 5:58 AM
Follow Us:
andhra style fish fry recipe in tamil
---Advertisement---
Advertisement

Andhra Style Fish Fry Recipe

மீன் என்றால் யாருக்காவது பிடிக்காமல் இருக்குமா.! வீட்டில் மீன் வாங்கி  தெரிந்தாலே எப்படா சமைப்பார்கள் என்று தண்ணீர் கூட குடிக்காமல் காத்துக்கொண்டிருப்போம். அதுவும் குழம்பை வைத்ததும் மீன் வறுப்பதற்கு ஆரம்பிப்பார்கள். நாமும் அந்த மீன் வறுவல் சிவந்த நிறம் வரும் வரைக்கும் காத்திருந்து சூடாக எடுத்து சாப்பிடும் ருசியோ ருசி. அப்பப்பா சொல்லும் போதே நாவில் உமிழ் நீர் சுரக்கிறதா.! சரி வாங்க இந்த பதிவில் ஆந்திரா ஸ்டைல் மீன் வறுவல் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

ஆந்திரா ஸ்டைல் மீன் வறுவல் செய்ய தேவையான பொருட்கள்: 

  • மீன்- 1/2 கிலோ
  • எண்ணெய்- 200 மில்லி லிட்டர்
  •  மிளகாய் தூள்- 1 தேக்கரண்டி
  • மல்லி தூள்- 1 தேக்கரண்டி
  • மஞ்சள் தூள்- 1/2 தேக்கரண்டி
  • மிளகு தூள்- 1/2 தேக்கரண்டி
  • இஞ்சி பூண்டு பேஸ்ட்-1 தேக்கரண்டி
  • எலுமிச்சை சாறு- சிறிதளவு
  • உப்பு – தேவையான அளவு

ஆந்திரா ஸ்பெஷல் கொண்டா ரெட்டி சிக்கன் பிரியாணி செய்வது எப்படி

ஆந்திரா ஸ்டைல் மீன் வறுவல் செய்முறை:

ஆந்திரா ஸ்டைல் மீன் வறுவல் செய்முறை

ஒரு தட்டு எடுத்து கொள்ளவும், அதோடு  1 தேக்கரண்டி  மிளகாய் தூள், 1/2 தேக்கரண்டி  மல்லி தூள். 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு பேஸ்ட் , 1/2 தேக்கரண்டி  மிளகு தூள், 1 தேக்கரண்டி மல்லி தூள், சிறிதளவு எலுமிச்சை சாறு, தேவையான அளவு உப்பு சேர்த்து பேஸ்ட்டாக கலந்து கொள்ளவும்.

கலந்து வைத்துள்ள பேஸ்ட்டை எடுத்து மீனில் மேல் நன்றாக தடவி வேண்டும். இதனை அப்படியே 1 மணி நேரம் ஊற விட வேண்டும்.

அதன் பிறகு அடுப்பில் தோசை கல்லை வைத்து எண்ணைய் ஊற்றி கொள்ளவும். தோசை கல்லானது சூடானதும் மசாலா பிசைந்து வைத்துள்ள மீனை சேர்க்கவும். மீனை இருபுறமும் சிவந்த நிறம் வரும் வரைக்கும் வேக விடவும். மசாலாவில் பச்சை வாசனை தீர்ந்து மொறுமொறுன்னு வந்த பிறகு அடுப்பை அணைத்து விடவும்.

வீடே மணக்கும் கேரளா ஸ்டைல் எரிசேரியை இப்படி ஒரு முறை செய்து சுவைத்து பாருங்கள்

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

கோடைகாலத்தில் அடிக்கிற வெயிலுக்கு ஏற்ற மாதிரி குளு குளுன்னு பன்னீர் ரோஸ் ஜெல்லி செய்து சுவைத்து பாருங்கள்..!

Nungu Sarbath Recipe in Tamil

கோடை காலத்தில் எத்தனையோ சர்பத் குடிச்சிருப்பீங்க..ஆனா இந்த மாதிரி ஒரு சர்பத்தை குடிச்சிருக்கவே மாட்டீங்க..!

Omapodi Recipe in Tamil

மொறு மொறுன்னு 10 நிமிடத்தில் சுவையான ஓமப்பொடி செய்வது எப்படி..?

chicken malai tikka recipe in tamil

ரம்ஜான் ஸ்பெஷல் மலாய் டிக்கா வீட்டிலேயே ஈஸியா செய்யலாம்..!

No Oil No Boil இட்லி- செய்வது எப்படி

No Oil No Boil இட்லி- செய்வது எப்படி

manna sathu maavu ingredients in tamil

Manna Health Mix-ல் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள்

chicken chinthamani recipe in tamil

கொங்குநாட்டு ஸ்பெஷல் சிக்கன் சிந்தாமணி செய்வது எப்படி ?

pongal festival food menu

தைப் பொங்கல் பண்டிகையின் போது நாம் சமைக்க வேண்டிய உணவுகள்

லஞ்சிக்கு வெறும் 10 நிமிடத்தில் சுவையான வேர்க்கடலை சாதம் செய்வது எப்படி..?