Andhra Style Gongura Pachadi Recipe in Tamil
இந்த உலகில் நாம் சுகமாக வாழவேண்டும் என்றால் நமக்கு மிக முக்கியமாக தேவைப்படுவது உணவு, உடை, உறைவிடம் (வாழ்விடம்) ஆகியவை தான். இவை முன்றும் ஒருவருக்கு நன்றாக அமைந்துவிட்டால் அவர் நிம்மதியாக வாழ்வார். அதிலும் குறிப்பாக இதில் முதலாவதாக உள்ள உணவு என்பது அனைவருக்கும் மிக மிக முக்கியமான ஒன்றாகும். அதனால் அனைவருமே உணவின் மீது மிகவும் விருப்பமும் மரியாதையும் வைத்திருப்பார்கள். அதிலும் ஒரு சிலர் உணவின் மீது மிகவும் விருப்பம் கொண்டிருப்பார்கள். அதாவது பலவகையான உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற ஆசையும் விருப்பம் கொண்டிருப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு எல்லாம் மிகவும் விருப்பமான ஒரு உணவுமுறை என்றால் அது ஆந்திர ஸ்டைல் உணவுமுறை தான். அதனால் தான் இன்றைய பதிவில் ஆந்திர ஸ்பெஷல் கோங்குரா பச்சடி எப்படி செய்வது என்பதை பற்றி விரிவாக பார்க்க இருக்கின்றோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து ஆந்திர ஸ்பெஷல் கோங்குரா பச்சடி எப்படி செய்வது என்பதை அறிந்து கொண்டு அதனை செய்து சுவைத்து மகிழுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Gongura Pachadi Recipe in Tamil:
ஆந்திர ஸ்டைல் கோங்குரா பச்சடி செய்வது எப்படி என்பதை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க.
இந்த கோங்குரா பச்சடிக்கு தேவையான பொருட்களை பற்றி முதலில் தெரிந்து கொள்வோம் வாங்க.
- கோங்குரா/சோரல் இலை – 2 கொத்துகள்
- கடுகு – 1/4 டேபிள் ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
- கடலை பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
- பெருங்காயத்தூள் – 1 1/4 டேபிள் ஸ்பூன்
- எண்ணெய் – 7 டேபிள் ஸ்பூன்
- கொத்தமல்லி விதை – 1 டேபிள் ஸ்பூன்
- சீரகம் – 1 1/4 டேபிள் ஸ்பூன்
- வெந்தயம் – 1/2 டேபிள் ஸ்பூன்
- சிவப்பு மிளகாய் – 19
- பூண்டு பற்கள் – 12
- கருவேப்பிலை
- உப்பு – 1 டேபிள் ஸ்பூன்
ஆந்திரா ஸ்பெஷல் கொண்டா ரெட்டி சிக்கன் பிரியாணி செய்வது எப்படி
செய்முறை:
ஸ்டேப் – 1
முதலி அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதனுடன் 1 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி விதை, 1 டேபிள் ஸ்பூன் சீரகம், 1/2 டேபிள் ஸ்பூன் வெந்தயம், 15 சிவப்பு மிளகாய் மற்றும் 5 பூண்டு பற்கள் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 2
அடுத்து அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதனுடன் நாம் வாங்கி வைத்துள்ள 2 கொத்துகள் கோங்குரா/சோரல் இலைகளை மற்றும் 3 பூண்டு பற்கள் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
பின்னர் இதனை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து கொள்ளுங்கள். அதனுடன் நாம் முன்னரே வதக்கி வைத்திருந்த மசாலா மற்றும் 1 டேபிள் ஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு பசைபோல் அரைத்து கொள்ளுங்கள்.
சமைத்து கொண்டிருக்கும் பொழுதே சுவைக்க தூண்டும் திண்டுக்கல் ஸ்பெஷல் காளான் பிரியாணி செய்வது எப்படி
ஸ்டேப் – 3
இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதனுடன் 1/4 டேபிள் ஸ்பூன் கடுகு, 1 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு, 1 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு, 3பூண்டு பற்கள், 4 சிவப்பு மிளகாய், கருவேப்பிலை மற்றும் நாம் அரைத்து வைத்துள்ள கோங்குராவையும் சேர்த்து 2 முதல் 3 நிமிடங்களுக்கு நன்கு வதக்கி கொள்ளுங்கள்.
இப்பொழுது சுவையான ஆந்திர ஸ்பெஷல் கோங்குரா பச்சடி தயாராகிவிட்டது வாங்க சுவைக்கலாம். நீங்களும் இந்த ஆந்திர ஸ்பெஷல் கோங்குரா பச்சடியை உங்கள் வீட்டில் செய்து சுவைத்து பாருங்கள்.
வீடே மணக்கும் கேரளா ஸ்டைல் எரிசேரியை இப்படி ஒரு முறை செய்து சுவைத்து பாருங்கள்
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |