உங்க வீட்டில் அப்பளம் இருக்க அப்போ இந்த ரெசிபியை ஒரு முறையை செய்து சுவைத்து பாருங்க..!

Advertisement

Appalam Gravy Recipe in Tamil

உங்க வீட்டில் உள்ளவர்கள் தினமும் ஒரு மாதிரியான குழம்பு மற்றும் கிரேவியே செய்து தருகிறாய் ஏதாவது புதுமையான கிரேவி செய்து தாருங்கள் என்று கேட்கிறார்களா..? அதே போல் உங்கள் வீட்டில் திடீரென்று ஒரு நாள் குழம்பு மற்றும் கிரேவி செய்வதற்கு எந்த ஒரு காய்கறியும் இல்லையென்றால் என்ன சமைப்பது என்பது மிகவும் குழப்பமாக இருக்கும். இப்படிப்பட்ட நிலை ஏற்படுபவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆம் நண்பர்களே இன்றைய பதிவில் மிகவும் புதுமையான மற்றும் மிகவும் ருசியான அப்பளம் கிரேவி செய்வது எப்படி என்பதை பற்றி தான் விரிவாக பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்து அசத்துங்கள்..!

அப்பளம் கிரேவி செய்வது எப்படி..?

 Appalam Recipe in Tamil

மிகவும் எளிமையான மற்றும் மிகவும் ருசியான அப்பளம் கிரேவி செய்வது எப்படி என்பதை பற்றி தான் விரிவாக இங்கு காணலாம். அதற்கு முன்பு இந்த அப்பளம் கிரேவி செய்வதற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.

  1. அப்பளம் – 6
  2. கொத்தமல்லி விதை – 2 டேபிள் ஸ்பூன் 
  3. பெருஞ்சீரகம் – 1/2 டேபிள் ஸ்பூன் 
  4. சீரகம் – 1/4 டேபிள் ஸ்பூன் 
  5. பட்டை – 1
  6. கிராம்பு – 2
  7. பிரிஞ்சு இலை – 1
  8. கல்பாசி – சிறிதளவு 
  9. இஞ்சி – 1 சிறிய துண்டு 
  10. பூண்டு – 5 பற்கள் 
  11. பச்சை மிளகாய் – 1
  12. வெங்காயம் – 2
  13. தக்காளி – 2
  14. உருளைக்கிழங்கு – 2
  15. மஞ்சள் தூள் – 1 1/2 டீஸ்பூன் 
  16. மிளகாய் தூள் – 2 டீஸ்பூன் 
  17. எண்ணெய் – தேவையான அளவு 
  18. தயிர் – 1/2 கப் 
  19. தண்ணீர் – தேவையான அளவு 
  20. உப்பு – தேவையான அளவு 

அப்பள குழம்பு செய்வது எப்படி

செய்முறை:

ஸ்டேப் – 1

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 2 உருளைக்கிழங்கினை சேர்த்து நன்கு வேகவைத்து எடுத்து அதனுடைய தோல்களை நீக்கி நன்கு மசித்து வைத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப் – 2

பின்னர் ஒரு மிக்சி ஜாரை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 6 அப்பளத்தை சிறிய சிறிய துண்டுகளாக உடைத்து சேர்த்து நன்கு பொடியாக அரைத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப் – 3 

இப்பொழுது ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் நாம் மசித்து வைத்துள்ள 2 உருளைக்கிழங்கு, அரைத்து வைத்துள்ள அப்பளம், 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசைந்து சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி எடுத்து வைத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப் – 4

பின்னர் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் தேவையான அளவு எண்ணெயை ஊற்றி நாம் உருட்டி வைத்துள்ள உருண்டைகளை போட்டு நன்கு பொறித்து எடுத்து கொள்ளுங்கள்.

Non Veg-யே மிஞ்சிடும் சுவையில் சைவ கீமா கிரேவி செய்வது எப்படி

ஸ்டேப் – 5

பிறகு ஒரு மிக்சி ஜாரை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி விதை, 1/2 டேபிள் ஸ்பூன் பெருஞ்சீரகம், 1/4 டேபிள் ஸ்பூன் சீரகம், 1 பட்டை, 2 கிராம்பு, 1 பிரிஞ்சு இலை, சிறிதளவு கல்பாசி, 1 சிறிய துண்டு இஞ்சி, 5 பற்கள் பூண்டு மற்றும் 1 பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப் – 6

அதனுடனே நாம் எடுத்து வைத்துள்ள 2 வெங்காயம் மற்றும் 2 தக்காளி ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்து கொள்ளுங்கள்.

பின்னர் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் தேவையான அளவு எண்ணெயை ஊற்றி அதில் நாம் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள்.

ஸ்டேப் – 7

அதனுடனே 1 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு மற்றும் 1/2 கப் தயிர் ஆகியவற்றையும் நன்கு வதக்கி கொள்ளுங்கள்.

ஸ்டேப் – 8

Appalam kulambu recipe in tamil

பிறகு அதனுடன் நாம் முன்னரே பொறித்து வைத்துள்ள உருண்டைகளையும் போட்டு நன்கு வதக்கி கொள்ளுங்கள். இப்பொழுது அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைத்து எடுத்து கொள்ளுங்கள்.

இப்பொது நமது சுவையான அப்பளம் கிரேவி தயாராகி விட்டது வாங்க சுவைக்கலாம். நீங்களும் இந்த அப்பளம் கிரேவியை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்து அசத்துங்கள்.

கத்திரிக்காய் கிரேவி இப்படி ஒருமுறை செய்து பாருங்கள்

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil
Advertisement