Arai keerai Kadayal in Tamil
இன்றைய காலத்தில் பெண்கள் வேலைக்கு செல்லும் நிலை ஏற்படுகிறது. அதனால் அவர்கள் சமையல் செய்ய முடியாத நிலை எற்படும் போது கடைகளில் விற்கும் உணவுகளை சாப்பிட்டு வருகிறார்கள். அதிலும் சத்தான உணவு சாப்பிடாமல் இருப்பதனால் பல்வேறு நோய்கள் வருகிறது. அதனால் இன்றைய பதிவில் அரைக்கீரை கடையல் செய்வதை கீழே பார்த்து தெரிந்து கொள்வோம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
அரைக்கீரை கடையல் செய்ய தேவையான பொருட்கள்:
- பாசிப்பருப்பு – 3 டேபுள் ஸ்பூன்
- தண்ணீர் – போதுமான அளவு
- சின்ன வெங்காயம் – 10
- தக்காளி – 1
- பச்சை மிளகாய் – 4
- தோல் உரித்த பூண்டு – 1
- பெருங்காயம் தூள் – 1/4 டேபுள் ஸ்பூன்
- மஞ்சள் தூள் – 1/4 டேபுள் ஸ்பூன்
- அரைக்கீரை – 1 கட்டு
- உப்பு – தேவையான அளவு
- நல்லெண்ணெய்- 1 டேபுள் ஸ்பூன்
- கடுகு – 1/2 டேபுள் ஸ்பூன்
- சீரகம் – 1/4 டேபுள் ஸ்பூன்
- வெள்ளை உளுந்த பருப்பு – 1/2 டேபுள் ஸ்பூன்
- வர மிளகாய் – 5
- சின்ன வெங்காயம் – 10
அரைக்கீரை கடையல் செய்முறை :
ஸ்டெப்: 1
முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து கொள்ளவும். பிறகு 3 டேபுள் ஸ்பூன் பாசிப்பருப்பு சேர்த்து அலசி எடுத்து கொள்ள வேண்டும். பாசிபருப்பில் 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி 20 நிமிடம் ஊற வைக்கவும். பிறகு ஒரு கடாயை எடுத்து கொண்டு, ஊற வைத்த பாசிப்பருப்பு , வெங்காயம், தக்காளி,பச்சை மிளகாய், தோல் உரித்த பூண்டு, பெருங்காயம் தூள், மஞ்சள் தூள், போன்ற பொருளை சேர்த்து 10 அல்லது 15 நிமிடம் வேக வைக்கவும்.
பொன்னாங்கண்ணி கீரை கூட்டு,பொரியல், சூப் செய்வது எப்படி?
ஸ்டெப்:2
1 கட்டு அரைக்கீரையை நன்றாக அலசி எடுத்து கொள்ளவும். பிறகு வேக வைத்த பாசிப்பருப்பு மீது தண்ணீர் இல்லாமல் போகும் வரை அரைக்கீரையை நன்றாக கிளறி விடும், அப்போது அரைக்கீரையானது சுருங்கி விடும்.
ஸ்டெப் : 3
ஒரு மண் பானையை எடுத்து கொண்டு, அதனுடன் வேக வைத்த அரைக்கீரை மற்றும் உப்பு தேவையான அளவு சேர்க்கவும். பிறகு அரைக்கீரையை ஒரு கரண்டி வைத்து கடைய வேண்டும். கீரையானது ஒரு நிலை வந்த பிறகு, அதனை ஒரு பாத்திரத்திற்கு மாற்றவும்.
எல்லாருக்கும் பிடிக்கும் மணத்தக்காளி கீரை பொரியல்..!
ஸ்டெப்: 
அரைக்கீரையை தாளிப்பதற்கு ஒரு கடாயை எடுத்து கொண்டு, 1டேபுள் ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து சூடான பின்பு அதனுடன், கடுகு, சீரகம் மற்றும் வெள்ளை உளுந்த பருப்பு சேர்த்து நன்றாக பொரிந்தவுடன், சின்ன வெங்காயம், வர மிளகாய் சேர்த்து, நிறம் மாறும் வரை வதக்கவும். பிறகு அடுப்பை நிறுத்தியவுடன் கடைந்து விட்டால் அரைக்கீரை கடையல் ரெடி.
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal Kurippugal |