10 நிமிடத்தில் பாயாசம்…! அதுவும் அரிசி பால் வைத்து பாயாசம் செய்யலாம் வாங்க..!

Arisi Paal Payasam Recipe 

பொதுவாக வீட்டில் உள்ள அனைவருக்கும் பாயாசம் என்பது பிடிக்கும். அதிலும் குறிப்பாக வீட்டிற்கு ஒரு நபர் என்று பாயாச பிரியர்கள் இருப்பார்கள். அவர்களுக்கு அசைவ உணவுகளை விட பாயாசம் தான் விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்றாக இருக்கும். இவ்வாறு இருக்கையில் நம்முடைய வீட்டிலும் சேமியா பாயாசம், பருப்பு பாயாசம், கோதுமை ரவை பாயாசம், அவல் பாயாசம், பால் பாயாசம் மற்றும் ஜவ்வரிசி பாயாசம் என இதுபோன்ற பாயாச ரெசிபிக்களை தான் நாம் அதிகமாக சாப்பிட்டு இருப்பீர்கள். அதனால் இன்றைய சமையல் குறிப்பு பதிவில் பாயாச பிரியர்களுக்கு என்று வெறும் 10 நிமிடத்தில் மணம் வீசக்கூடிய அரிசி பால் பாயாசம் செய்வது எப்படி என்று தெரிந்துக்கொள்ள போகிறோம். அதனால் பதிவை தொடர்ந்து படித்து தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள் நண்பர்களே.!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

அரிசி பால் பாயாசம் செய்ய தேவைப்படும் பொருட்கள்:

அரிசி பால் பாயாசம்

  • பச்சரிசி- 50 கிராம் 
  • பால்- 1/2 லிட்டர் 
  • தண்ணீர்- 1/4 டம்ளர் 
  • முந்திரி- தேவையான அளவு 
  • பாதாம்- தேவையான அளவு 
  • ஏலக்காய்- 3
  • வெல்லம்- 100 கிராம் 
  • குங்குமப் பூ- சிறிதளவு 

Recipes👇👇 வெறும் 10 நிமிடத்தில் வீடே மணக்க வைக்கக்கூடிய அவல் பாயாசம் செய்வது எப்படி..

அரிசி பால் பாயாசம் செய்வது எப்படி..?

 

முதலில் எடுத்துவைத்துள்ள பச்சரிசியினை சுத்தம் செய்து நன்றாக தண்ணீரில் ஊற வைத்து விடுங்கள். அதன் பின்பு அரிசி நன்றாக ஊறிய பிறகு அதனை உங்களுடைய கைகளால் நன்றாக பிசைந்து கொள்ளுங்கள்.

அரிசி பால் பாயாசம் செய்வது எப்படி

இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரத்தில் 1/2 லிட்டர் பாலினை சேர்த்து அதனுடன் 1/4 டம்ளர் தண்ணீரையும் சேர்த்து நன்றாக கொதிக்க விடுங்கள்.

பால் நன்றாக கொதித்த பிறகு அந்த பாலில் இருந்து 2 கரண்டி அளவிற்கு பால் ஒரு பவுலில் எடுத்துக்கொண்டு அதன் மேலே சிறிதளவு குங்குமப் பூவினை சேர்த்து தனியாக வைத்து விடுங்கள்.

அடுத்ததாக அடுப்பில் உள்ள பாலுடன் பிசைந்து வைத்துள்ள அரிசியினை சேர்த்து  நன்றாக கலந்து கொண்டு பின்பு அடுப்பை மிதமான தீயில் வைத்து 10 நிமிடம் அரிசியை பாலுடன் வேக வைக்க வேண்டும்.

அதன் பிறகு எடுத்துவைத்துள்ள முந்திரி மற்றும் பாதாமை மிக்சி ஜாரில் போட்டு ஒன்று, இரண்டாக நசுக்கி வைத்து கொள்ளுங்கள். பின்பு எடுத்துவைத்துள்ள 100 கிராம் வெல்லத்தையும் நசுக்கி வைத்து விடுங்கள்.

கடைசியாக 10 நிமிடம் கழித்த பிறகு பார்த்தால் அரிசி ஆனது பாலுடன் சேர்ந்து நன்றாக வெந்து இருக்கும். அதனால் இப்போது நசுக்கி வைத்துள்ள பாதாம், முந்திரி, வெல்லம் மற்றும் ஏலக்காய் இவற்றை எல்லாம் சேர்த்து ஒரு 2 நிமிடம் கலந்து கொள்ளுங்கள்.

2 நிமிடம் கழித்த பிறகு தனியாக பவுலில் வைத்துள்ள குங்குமப்பூ பாலினையும் பாத்திரத்தில் உள்ள பாயாசத்துடன் சேர்த்து ஒரு முறை கலந்து இறக்கினால் போதும். மணம் வீசக்கூடிய அரிசி பால் பாயாசம் தயார்.

அவ்வளவு தாங்க இப்போது அரிசி பால் பாயாசம் வீட்டில் செய்து அசத்துங்க..!

Recipes👇👇 முறையான கல்யாண வீட்டு பால் பாயாசம்

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil