பக்ரீத் ஸ்பெஷல் மட்டன் பிரியாணி செய்வது எப்படி..?

Advertisement

Bakrid Special Mutton Biryani 

பொதுவாக நாம் அனைவரும் ஒவ்வொரு பண்டிகை அன்றும் ஏதோ ஒரு ஸ்பெஷல் சாப்பாட்டினை செய்து சாப்பிடுவோம். அந்த வகையில் தீபாவளி என்றால் இனிப்பு மற்றும் காரமான பலகாரம், பொங்கல் என்றால் சர்க்கரை பொங்கல் மற்றும் வெண் பொங்கல் என இதுமாதிரி செய்து சாப்பிடுவோம். அதுவே இஸ்லாமியர்களின் பண்டிகை என்றால் முதலில் இருப்பது பிரியாணி தான். பிரியாணிக்கு பிறகு மற்ற அனைத்துமே இடம் பெற்றிருக்கும். அந்த வகையில் இன்று நாளை பக்ரீத் பண்டிகை வர இருப்பதால் பக்ரீத் ஸ்பெஷல் மட்டன் பிரியாணி நாவிற்கு சுவை தரும் முறையில் செய்வது எப்படி என்று தான் பார்க்கப்போகிறோம்.

மட்டன் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்:

  1. மட்டன்- 1 கிலோ 
  2. பெரிய வெங்காயம்- 4
  3. பச்சை மிளகாய்- 4
  4. இஞ்சி பூண்டு பேஸ்ட்- 2 ஸ்பூன்
  5. பாசுமதி அரிசி- 1/2 கிலோ 
  6. மிளகுத்தூள்- 1 ஸ்பூன் 
  7. நெய்- 6 ஸ்பூன் 
  8. எலுமிச்சை சாறு- 1 ஸ்பூன் 
  9. பிரியாணி இலை- 3
  10. ஜாபத்திரி- 1
  11. அன்னாசிப்பூ- 2
  12. பட்டை- 3
  13. ஏலக்காய்- 4
  14. தயிர்- 2 ஸ்பூன் 
  15. முந்திரி- 10
  16. பாதாம்- 10
  17. கறிவேப்பிலை- தேவையான அளவு 
  18. கொத்தமல்லி இலை- தேவையான அளவு 
  19. உப்பு- தேவையான அளவு 
  20. தேங்காய்- 1/2 மூடி 

மட்டன் பிரியாணி செய்வதற்கு மேலே சொல்லப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தினையும் சரியான அளவில் எடுத்து வைத்துகொள்ளுங்கள்.

பக்ரீத் ஸ்பெஷல் செட்டிநாடு மட்டன் பொரிச்ச கறி

பாய் வீட்டு மட்டன் பிரியாணி செய்வது எப்படி..?

முதலில் எடுத்துவைத்துள்ள மட்டன், பச்சை மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி என இவற்றை எல்லாம் நன்றாக தண்ணீரில் அலசி நறுக்கி வைத்து கொள்ளுங்கள்.

பாய் வீட்டு மட்டன் பிரியாணி செய்வது எப்படி

அதன் பிறகு மிக்சி ஜாரில் பாதாம் மற்றும் முந்திரியை சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக பேஸ்ட் போல அரைத்து கொள்ளுங்கள். பின்பு 1/2 மூடி தேங்காயினையும் துருவி அரைத்து தேங்காய் பால் எடுத்துக்கொள்ளுங்கள்.

இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் குக்கர் அல்லது கடாயினை வைத்து  5 ஸ்பூன் நெய் சேர்த்து பின்பு அதனுடன் எடுத்துவைத்துள்ள பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, ஜாபத்திரி, அன்னாசிப்பூ மற்றும் ஏலக்காய் என இவை அனைத்தினையும் சேர்த்து 2 நிமிடம் கரண்டியால் வறுத்து கொள்ளுங்கள்.

2 நிமிடம் கழித்து கடாயில் நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக பொன் நிறமாக வரும் வரை வதக்கி கொள்ளுங்கள்.

அடுத்து அதனையுடன் கறிவேப்பிலை, கொத்தமல்லி, பாதாம் மற்றும் முந்திரி பேஸ்ட், 2 ஸ்பூன் தயிர் என இவற்றை சேர்த்து நன்றாக 10 நிமிடம் வரை கரண்டியால் கலந்து கொண்டே இருங்கள்.

10 நிமிடம் கழித்து அலசி வைத்துள்ள மட்டன் மற்றும் தேவையான அளவு உப்பு, எடுத்துவைத்துள்ள தேங்காய் பாலை சேர்த்து நன்கு கலந்து 5 விசில் வரை வைத்து கொள்ளுங்கள்.

குக்கர் 5 விசில் விட்ட பிறகு பார்த்தால் மட்டன் நன்றாக வெந்து இருக்கும். இப்போது 2 டம்ளர் தண்ணீர் மற்றும் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 ஸ்பூன் மிளகு தூள், அலசி வைத்துள்ள அரிசியை சேர்த்து குக்கரை மூடி 2 விசில் வரும் வரை அரிசியை வேக விடுங்கள்.

கடைசியாக 2 விசில் கழித்து குக்கரை திறந்து பார்த்தால் சூப்பரான சுவையில் பக்ரீத் ஸ்பெஷல் மட்டன் பிரியாணி தயார்.

 உங்களுக்கு இது போன்ற முக்கிய தகவல்கள், அழகு குறிப்புகள், ஆன்மீக தகவல்கள்,சமையல் குறிப்புகள் போன்றவைற்றை தெரிந்துகொள்ள பொதுநலம் வலைத்தளத்தை பின்தொடருங்கள்.

அப்பப்பா நாவூறும் மஷ்ரூம் பெப்பர் ஃப்ரை இப்படி செஞ்சு பாருங்க..

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal Kurippugal
Advertisement