Beetroot Cutlet Easy Recipe in Tamil
பொதுவாக உணவு என்றால் நாம் அனைவருக்குமே மிக மிக பிடிக்கும். அதிலும் நமக்கு விருப்பமான ஒரு உணவு என்றால் அன்று நாம் ஒரு புடி.. என்று வயிறார சாப்பிடுவோம். அதுவே நமக்கு பிடிக்காத உணவு என்றால் ஏதோ வேண்டாவெறுப்பாகவே சாப்பிடுவோம். பெரியவர்கள் நாமே இப்படியென்றால் குழந்தைகள் மிக மிக மோசம் அவர்களுக்கு ஒரு உணவு பிடிக்கவில்லை என்றால் அதனை முற்றிலுமாக ஒதுக்கிவிடுவார்கள். அதனை சாப்பிடவே சாப்பிட மாட்டார்கள். அப்படி பல குழந்தைகளுக்கும் பிடிக்காத ஒரு உணவுப்பொருள் என்றால் அது பீட்ரூட் தான். ஆனால் இந்த பீட்ரூட்டில் அதிக அளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. அதனால் இந்த பீட்ரூட்டை உங்களின் குழந்தைகளுக்கு அளிக்கும் பொழுது அவர்களுக்கு அது பீட்ரூட் என்றே தெரியக்கூடாது. அப்பொழுது தான் அவர்கள் அதனை சாப்பிடுவார்கள். அதனால் தான் இன்றைய பதிவில் சுவையான மற்றும் ஆரோக்கியமான பீட்ரூட் கட்லெட் செய்வது எப்படி என்பதை பற்றி விரிவாக பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இந்த பீட்ரூட் கட்லெட் செய்வது எப்படி என்பதை அறிந்து கொண்டு அதனை செய்து உங்களின் குழந்தைகளுக்கு அளியுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Beetroot Cutlet Recipe in Tamil:
சுவையான மற்றும் ஆரோக்கியமான பீட்ரூட் கட்லெட் செய்வது எப்படி என்பதை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க.
முதலில் இந்த பீட்ரூட் கட்லெட் செய்வதற்கு தேவையான பொருட்களை பார்க்கலாம்.
- பீட்ரூட் – 2
- கேரட் – 2
- உருளைக்கிழங்கு – 3
- வெங்காயம் – 2
- கொத்தமல்லி இலை – 1 கைப்பிடி அளவு
- மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்
- மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
- மல்லித்தூள் – 1 டீஸ்பூன்
- கரம் மசாலா – 1 டீஸ்பூன்
- பிரட் தூள் – 1 1/2 கப்
- சோள மாவு – 2 டேபிள் ஸ்பூன்
- எண்ணெய் – தேவையான அளவு
- உப்பு – தேவையான அளவு
- தண்ணீர் – தேவையான அளவு
வீட்டில் பீட்ரூட் சேமியா இருக்கா அப்போ இதை செய்து பாருங்கள்
செய்முறை:
ஸ்டேப் – 1
முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 2 பீட்ரூட், 2 கேரட் மற்றும் 3 உருளைக்கிழங்கு ஆகியவற்றை தோல்களை நீக்கிவிட்டு சுத்தம் செய்து ஒரு குக்கரில் போட்டு தேவையான அளவு தண்ணீரை ஊற்றி நன்கு வேகவைத்துக் கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 2
அது நன்கு வெந்த பிறகு அதனை நன்கு மசித்து கொள்ளுங்கள். பிறகு அதில் நாம் எடுத்து வைத்துள்ள 2 வெங்காயம் மற்றும் 1 கைப்பிடி அளவு கொத்தமல்லி இலை பொடி பொடியாக நறுக்கி சேர்த்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 3
பிறகு அதனுடன் 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள், 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள், 1 டீஸ்பூன் மல்லித்தூள், 1 டீஸ்பூன் கரம் மசாலா, 1/2 கப் பிரட் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
பீட்ரூட் இருக்கிறதா உடனே இந்த பீட்ரூட் அல்வா செய்து பாருங்கள்
ஸ்டேப் – 4
பின்னர் அதனை சிறிய சிறிய கட்லெட் வடிவத்திற்கு தட்டி வைத்து கொள்ளுங்கள். பிறகு ஒரு கிண்ணத்தில் நாம் எடுத்து வைத்துள்ள 2 டேபிள் ஸ்பூன் சோள மாவு மற்றும் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி நன்கு கலந்து வைத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 5
இப்பொழுது நாம் தயாரித்து வைத்துள்ள கட்லெட்டுகளை இந்த கலவையில் போட்டு எடுத்து கொள்ளுங்கள். பிறகு அந்த கட்லெட்டுகளை 1 கப் பிரட் தூளிலும் போட்டு பிரட்டி எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 6
அடுத்து அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய்யை ஊற்றி நாம் தயாரித்து வைத்துள்ள கட்லெட்டுகளை போட்டு பொறித்து எடுத்தால் சுவையான பீட்ரூட் கட்லெட் தயார்.
வாங்க சுவைக்கலாம்..! நீங்களும் இந்த பீட்ரூட் கட்லெட்டை உங்கள் வீட்டில் செய்து சுவைத்து மகிழுங்கள்.
ஆந்திர ஸ்பெஷல் கோங்குரா பச்சடியை இப்படி ஒரு முறை செய்து சுவைத்து பாருங்கள்
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |