Beetroot Pakoda
வணக்கம் நண்பர்களே..! இன்றைய ரெசிபி பதிவானது நாம் அனைவருக்கும் ஆரோக்கிய ரீதியாகவும், சமையல் ரீதியாகவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனென்றால் இன்று பீட்ரூட்டில் செய்யக்கூடிய ஒரு பக்கோடா ரெசிபியினை தான் பார்க்கப்போகிறோம். அந்த வகையில் பார்த்தால் நம் வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருக்கும் பீட்ரூட் என்றாலே சுத்தமாக பிடிக்காது. ஆனால் இனி இந்த பிரச்சனையே இருக்காது. நீங்கள் பீட்ரூட்டை வைத்து மற்ற ரெசிபியை செய்து கொடுத்தால் தான் சாப்பிட மறுப்பார்கள். அதுவே பீட்ரூட்டில் மொறுமொறுப்பான பக்கோடா செய்து கொடுத்துதீர்கள் என்றால் யாரும் வேண்டாம் என்று சொல்லாமல் கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். அதனால் இந்த பதிவில் பீட்ரூட் பக்கோடா செய்வது எப்படி என்று பார்த்து தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
பீட்ரூட் பக்கோடா:
மொறுமொறுப்பான பீட்ரூட் பக்கோடா செய்வதற்கு முதலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒன்று ஒன்றாக சரியான அளவில் எடுத்துக்கொள்ளுங்கள்.
- பீட்ரூட்- 2
- கடலை மாவு- 100 கிராம்
- பூண்டு- 3 பற்கள்
- வெங்காயம்- 2 பெரியது
- பச்சை மிளகாய்- 2
- சோம்பு- 1 ஸ்பூன்
- பிரெட்- 3
- மிளகாய் தூள்- 1/2 ஸ்பூன்
- பேக்கிங் சோடா- சிறிதளவு
- பெருங்காயம்- சிறிதளவு
- உப்பு- தேவையான அளவு
- எண்ணெய்- தேவையான அளவு
- கறிவேப்பிலை- தேவையான அளவு
ஒரு முறை சோயா பெப்பர் பிரை இப்படி செஞ்சு பாருங்க
Beetroot Recipes in Tamil:
முதலில் எடுத்துவைத்துள்ள பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை பக்கோடா செய்வதற்க்கு ஏற்றவாறு நறுக்கி வைத்து கொள்ளுங்கள். பின்பு பீட்ரூட்டை துருவி தனியாக வைக்க வேண்டும்.
இப்போது 3 பிரெட்டினையும் நன்றாக துருவி வைக்க வேண்டும். அதன் பிறகு 3 பற்கள் பூண்டு மற்றும் 1 ஸ்பூன் சோம்பு இந்த இரண்டையும் சிறிதளவு நச்சு வைத்து விடுங்கள்.
அடுத்து ஒரு பவுலில் 100 கிராம் கடலை மாவு, துருவிய பீட்ரூட் மற்றும் பிரெட், நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் பெரிய வெங்காயத்தை சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக 5 நிமிடம் பிசைந்து கொள்ள வேண்டும்.
5 நிமிடம் கழித்த பிறகு பவுலில் உள்ள பொருளுடன் நச்சு வைத்துள்ள பூண்டு, சோம்பு, எடுத்துவைத்துள்ள பெருங்காயம், பேக்கிங் சோடா, தேவையான அளவு உப்பு மற்றும் மிளகாய் தூளை சேர்த்து மீண்டும் 2 நிமிடம் மாவினை ஒன்றுடன் ஒன்றாக சேரும் வரை பிசைந்து கொள்ள வேண்டும்.
கடைசியாக மாவுடன் கறிவேப்பிலை சேர்த்து பிசைந்து விடுங்கள். இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கொள்ளுங்கள்.
கடாயில் உள்ள எண்ணெய் நன்றாக காய்ந்த பிறகு பிசைந்து வைத்துள்ள மாவினை பக்கோடா போல செய்து எண்ணெயில் போட்டு விடுங்கள். பின்பு பக்கோடா நன்றாக வெந்த பிறகு எண்ணெயில் இருந்து அதனை எடுத்து விடுங்கள்.
இத்தகைய முறையில் மற்ற மாவினையும் போட்டு எடுத்தால் போதும் மொறுமொறுப்பான பீட்ரூட் பக்கோடா தயார்.
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |