Bisi Bele Bath Recipe Karnataka Style
சமையலை பொறுத்தவரை அனைவருக்கும் ஒரே மாதிரியான விருப்பங்கள் என்பது இருப்பது இல்லை. ஏனென்றால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான சமையல் தான் பிடித்து இருக்கும். அதிலும் சிலருக்கு ஒவ்வொரு ஊரிலும் ஸ்பெஷலாக இருக்கும் சாப்பாட்டினை சாப்பிடுவதற்கு தான் அதிகமாக பிடிக்கும். இதற்காக சில விடுமுறை நாட்களில் சென்று சாப்பிட்டு வருவார்கள். அந்த வகையில் பார்த்தால் தென்னிந்திய ஸ்பெஷல் பிசிபெல்லாபாத் பிடிக்கும். ஆனால் இதை எப்படி வீட்டிலேயே சுவை மாறாமல் செய்வது என்ற குழப்பம் இருக்கும். அதனால் இன்றைய பதிவில் அனைவருக்கும் பிடித்த பிசிபெல்லாபாத் வீட்டிலேயே கர்நாடக சுவையில் செய்வது எப்படி என்பதை தான் பார்க்கப்போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
பிசிபெல்லாபாத் செய்ய தேவைப்படும் பொருட்கள்:
- பச்சை அரிசி- 150 கிராம்
- துவரம் பருப்பு- 120 கிராம்
- கேரட்- 2
- பீன்ஸ்- 5
- மஞ்சள்தூள்- 1/2 சோபூன்
- முந்திரி- 5
- கடுகு- 1/2 ஸ்பூன்
- வெல்லம்- 2 ஸ்பூன்
- நெய்- 2 ஸ்பூன்
- புளி கரைசல் – சிறிதளவு
- உப்பு- தேவையான அளவு
- எண்ணெய்- தேவையான அளவு
வறுத்து அரைக்க தேவையான பொருட்கள்:
- மல்லி- 1 ஸ்பூன்
- கசகசா- 4 ஸ்பூன்
- வெள்ளை எள்- 4 ஸ்பூன்
- மிளகு- 3/4 ஸ்பூன்
- கடலை பருப்பு- 1 ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு- 4 ஸ்பூன்
- சீரகம்- 1 ஸ்பூன்
- காய்ந்த மிளகாய்- 20
- துருவிய தேங்காய்- 1 பவுல்
- இலவங்கம்- 5
- பட்டை- 2
- வெந்தயம்- 3/4
தஞ்சாவூர் ஸ்பெஷல் சாம்பார் பொடி செய்ய என்னென்ன பொருட்கள் வேண்டும் தெரியுமா
பிசிபெல்லாபாத் செய்வது எப்படி..?
முதலில் எடுத்துவைத்துள்ள வைத்துள்ள துவரம் பருப்பு மற்றும் பச்சை அரிசியினை தண்ணீரில் முதலில் ஊறவைத்து விடுங்கள். பின்பு இவை இரண்டு ஊறியதும் அதனை குக்கரில் சேர்த்து கொள்ளுங்கள்.
இப்போது நீங்கள் துவரம் பருப்பு மற்றும் பச்சை அரிசியினை சேர்த்து வரும் அளவில் மூன்று பங்கிற்கு தண்ணீர் சேர்த்து அதனுடன் நறுக்கிய பீன்ஸ் மற்றும் கேரட், 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள், தேவையான அளவு சேர்த்து 4 விசில் வரும் வரை வேக வைத்து விடுங்கள்.
அடுத்து அடுப்பில் ஒரு கடாயினை சேர்த்து அதில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்த பிறகு வறுத்து அரைக்க வைத்துள்ள பொருளை ஒன்று ஒன்றாக சேர்த்து நன்றாக பொன் நிறம் வரும் வரை வறுத்து தனியாக வைத்து விடுங்கள்.
அதன் பிறகு அதே கடாயில் எண்ணெய் சேர்த்து அதில் காய்ந்த மிளகாய் 15, கறிவேப்பிலை, துருவிய தேங்காய் மற்றும் வெந்தயம் சேர்த்து பொன் நிறமாக வருமாறு வறுத்துக் ஆற வைத்து விடுங்கள்.
இதனை தொடர்ந்து தனித்தனியாக வறுத்து வைத்துள்ள இரண்டு பொருளையும் மிக்சி ஜாரில் சேர்த்து நன்றாக பவுடர் போல அரைத்து விடுங்கள். அவ்வளவு தான் பிசிபெல்லாபாத் பவுடர் தயார்.
கடைசியாக ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்த பிறகு 5 காய்ந்த மிளகாய், மஞ்சள் தூள், புளிக்கரைசல், கறிவேப்பிலை சேர்த்து கொதிக்க விடுங்கள். பின்பு கரைசல் கொதித்த பிறகு அதனுடன் உப்பு மற்றும் வெல்லம் சேர்த்து மீண்டும் கொதிக்க விடுங்கள்.
இவை அனைத்தும் கொதித்த பிறகு குக்கரில் வேக வைத்துள்ள அரிசி மற்றும் தேவையான அளவு பிசிபெல்லாபாத் பவுடர் சேர்த்து 5 நிமிடம் கலந்து கொள்ளுங்கள்.
5 நிமிடம் கழித்து நெய்யினால் பொறித்த முந்திரி பருப்பு மற்றும் கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து இறக்கினால் போதும் பிசிபெல்லாபாத் தயார். இத்தகைய கர்நாடக ரெசிபியை உங்களுடைய வீட்டிலும் செய்து பார்த்து அசத்துங்கள்.
மேலும் பிசிபெல்லாபாத் சமையலுக்கு போக மீதம் இருப்பதை ஸ்டோர் செய்து வைத்து விடுங்கள்.
இன்னைக்கு நைட் இந்த தோசையை செஞ்சு பாருங்க.. அப்புறம் அடிக்கடி செய்வீங்க..
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |