Bitter Gourd Gravy Recipe in Tamil
இன்றைய காலத்தில் சத்தான காய்கறிகளை யாரும் சாப்பிடுவது இல்லை. அதிலும் வெறுக்கும் காயாக பாகற்காய் உள்ளது. அதிலும் பாகற்காயில் பல்வேறு சத்துக்கள் நிரம்பியுள்ளது. பாகற்காய் உள்ள சத்துக்கள் நமது வயிற்றில் இருக்கும் ஒட்டுண்ணிகளை அழிக்கும் காயாக பாகற்காய் உள்ளது. அதனால் இன்றைய பதிவில் பாகற்காய் கிரேவி செய்வதை பற்றி கீழே பார்த்து தெரிந்து கொள்வோம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
பாகற்காய் கிரேவி செய்ய தேவையான பொருட்கள்:
- எண்ணெய் – 4 டேபுள் ஸ்பூன்
- பாகற்காய் – 1/2 கப்
- கடுகு – 1/2 டேபுள் ஸ்பூன்
- சீரகம் – 1/2 டேபுள் ஸ்பூன்
- பச்சை மிளகாய் – 4
- பூண்டு – 20
- வெங்காயம் – 20
- அரைந்த தக்காளி – 3
- மஞ்சள் தூள் – 1/2 டேபுள் ஸ்பூன்
- மிளகாய் தூள் – 1 டேபுள் ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- அரைத்த தேங்காய் – சிறிதளவு
- கொத்தமல்லி தூள் – 1/2 டேபுள் ஸ்பூன்
- வெள்ளை கொண்டைக்கடலை – 1/4 கப்
பாகற்காய் கிரேவி செய்முறை:
ஸ்டெப்: 1
முதலில் பாகற்காயை சிறு துண்டுகளாக கட் பண்ணி எடுத்து கொள்ளவும். பிறகு ஒரு கடாயை எடுத்து கொண்டு, அதில் எண்ணெய் ஊற்றி சூடான பின்பு, பாகற்காய் சேர்த்து 20 நிமிடம் வறுத்து எடுத்து கொள்ள வேண்டும்.
நாவில் எச்சு ஊற வைக்கும் முட்டைகோஸ் மஞ்சூரியன்
ஸ்டெப்: 2
அதே கடாயில் எண்ணெய் ஊற்றி சூடான பின்பு கடுகு, சீரகம், பச்சை மிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து, அதன் பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும். பிறகு 3 தக்காளியை மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து எடுத்து கொள்ள வேண்டும். பிறகு வெங்காயம், மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்றாக வதக்கவும். இதனுடன் அரைத்த தக்காளியையும் சேர்த்து வதக்கி கொள்ளவும். பிறகு இதில் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
ஸ்டெப்: 3
தேங்காய் மற்றும் கொத்தமல்லி தூள் இரண்டும் சேர்த்து விழுதாக அரைக்கவும். அரைந்த தேங்காய் விழுதை சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும். அடுத்தது வெள்ளை கொண்டைக்கடலை மற்றும் வறுத்த பாகற்காய் சேர்த்து கொதிக்க விடவும். எண்ணெய் பிரிந்து வரும் வரை நிலையில் அடுப்பை அணைத்து விடவும். அவ்ளோ தாங்க பாகற்காய் கிரேவி ரெடி.!
சிக்கன் சூப் இப்படி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் செமையா இருக்கும்..!
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |