Bitter Gourd Powder Recipe in Tamil
இன்றைய இல்லத்தரசிகளுக்கு தினமும் இட்லி, தோசைக்கு சட்னி அல்லது பொடி செய்வது கடினமான வேலையாக உள்ளது. ஒரு சிலருக்கு ஒரு வகையான பொடியை சாப்பிடுவது பிடிக்காமல் போய்விடும். ஆனால் என்ன செய்வது என்று தெரியாமல் சாப்பிட்டு வருவார்கள். அதிலும் நம் வெறுத்து ஒதுக்கும் காயாக பாகற்காய் உள்ளது. ஏனெனில் அது கசக்கும் தன்மை கொண்டதால் அதனை யாரும் விரும்பி சாப்பிட மாட்டார்கள் அதனால் இன்றைய பதிவில் புதுமையான முறையில் பாகற்காய் வைத்து பொடி செய்வதை பற்றி கீழே பார்த்து தெரிந்து கொள்வோம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇https://bit.ly/3Bfc0Gl |
பாகற்காய் பொடி செய்ய தேவையான பொருட்கள் :
- பாகற்காய் –1/4 கிலோ
- எண்ணெய் – 3 டேபுள் ஸ்பூன்
- தோல் உரித்த பூண்டு – 5
- கடலை பருப்பு – 2 டேபுள் ஸ்பூன்
- வெள்ளை உளுந்து – 2 டேபுள் ஸ்பூன்
- கொத்தமல்லி – 1டேபுள் ஸ்பூன்
- புளி – சிறிதளவு
- காய்ந்த கருவேப்பிலை – 1 கப்
- மிளகாய் – 7
- சீரகம் – 1 டேபுள் ஸ்பூன்
- கருப்பு எள் – 2 டேபுள் ஸ்பூன்
- தேவையான அளவு – உப்பு
- வெல்லம் – 1 டேபுள் ஸ்பூன்
ஐயர் வீட்டு சுவையான இட்லி பொடி செய்வது எப்படி தெரியுமா..?
பாகற்காய் பொடி செய்முறை :
ஸ்டெப் :1
முதலில் பாகற்காயை அலசி சிறு துண்டுகளாக கட் பண்ணி எடுத்து கொள்ள வேண்டும். இதனை மிக்ஸியில் சேர்த்து நன்றாக அரைக்கவும். பிறகு கடாயை எடுத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடான பின்பு, அரைத்து வைத்த பாகற்காயை சேர்த்து 10 நிமிடம் நன்றாக வதக்கவும். பின்பு பாகற்காயின் பச்சை வாசனை, ஈரப்பதம், அதன் நிறம் மாறியதும் ஒரு பவுலுக்கு மாற்றவும்.
ஸ்டெப்:2
அடுத்தது அதே கடாயில் எண்ணெய் ஊற்றி, அதனுடன் பூண்டு சேர்த்து அதன் நிறம் மாறும் வரை வதக்கவும். பிறகு கடலை பருப்பு, வெள்ளை உளுந்து, கொத்தமல்லி, புளி, காய்ந்த கருவேப்பிலை, காய்ந்த மிளகாய், சீரகம் மற்றும் எள் போன்ற பொருளை சேர்த்து 30 நிமிடம் வறுத்து எடுக்கவும். பிறகு வறுத்து வைத்ததை ஆற விடவும்.
பாட்டியின் ஸ்பெஷல் குழம்பு பொடி செய்முறை
ஸ்டெப்: 3
ஒரு மிக்சியை எடுத்து கொண்டு, அதனுடன் வதக்கிய வைத்த பொருட்கள், தேவையான அளவு உப்பு மற்றும் வெல்லம் சேர்த்து அதனை கொரகொரப்பாக அரைத்து எடுத்தால் பாகற்காய் பொடி ரெடி.!
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal Kurippugal |