தீபாவளி ஸ்பெஷல் பம்பாய் லக்டி..! இப்படி செஞ்சி அசத்துங்க..!

Advertisement

Bombay Lakdi Sweet Recipe in Tamil

என்ன பிரண்ட்ஸ் தீபாவளி வந்தாச்சா..? அப்போ எல்லோர் வீட்டிலும் ஸ்நாக்ஸ் செய்ய ஆரம்பித்திருப்பார்கள். பொதுவாக தீபாவளி என்றால் அனைவரின் வீடுகளிலும் முறுக்கு, அதிரசம், தேங்காய் பாறை போன்ற பலகாரங்கள் செய்வார்கள். எவ்வளவு காலம் தான் ஒரே ஸ்நாக்ஸ் செய்வது சொல்லுங்கள். கொஞ்சம் வித்தியாசமாக செய்யலாமே என்று தோன்றும். அதனால் தான் எங்கள் பதிவின் வாயிலாக தினமும் ஒரு தீபாவளி ஸ்பெஷல் ரெசிபி பற்றி சொல்லிக்கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று மிகவும் ஸ்வீட் ஆன பம்பாய் லக்டி வெறும் 10 நிமிடத்தில் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க..!

பம்பாய் லக்டி செய்வது எப்படி..? 

தேவையான பொருட்கள்: 

  1. மைதா மாவு – 2 கப்
  2. சர்க்கரை – 1/2 கப்
  3. ஏலக்காய் – 4 
  4. நெய் – 1 டேபிள் ஸ்பூன்
  5. எண்ணெய் தேவையான அளவு
  6. தண்ணீர் தேவையான அளவு

மிக்சி ஜார் எடுத்து கொள்ளவும்: 

மிக்சி ஜார் எடுத்து கொள்ளவும்

முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா மாவு 2 கப் அளவிற்கு எடுத்து கொள்ளுங்கள்.

அடுத்து ஒரு மிக்சி ஜாரில் 1/2 கப் அளவிற்கு சர்க்கரை சேர்த்து அதனுடன் ஏலக்காய் 4 சேர்த்து நன்றாக பவுடர் பதத்திற்கு அரைத்து கொள்ளுங்கள்.

அரைத்த பவுடரை மைதா மாவுடன் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். அதில் ஒரு பிஞ் அளவிற்கு உப்பு சேர்த்து கொள்ளவும்.

தீபாவளிக்கு புதுசா முந்திரி பாதாம் கட்லி செய்து பாருங்க..!

மாவு போல பிசைய வேண்டும்: 

மாவு போல பிசைய வேண்டும்

அடுத்து அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பிசைவது போல பிசைய வேண்டும். பின் அதில் நெய் 1 டேபிள் ஸ்பூன் அளவு சேர்த்து பிசைந்து 15 நிமிடம் வரை மூடி வைக்க வேண்டும்.

மாவு போல பிசைய வேண்டும்

15 நிமிடங்கள் கழித்து அந்த மாவை உருட்டி கொஞ்சம் மொத்தமாக சப்பாத்தி கட்டையில் வைத்து தேய்த்து கொள்ளுங்கள். பின் அதை மேல் படத்தில் உள்ளதை போல நறுக்கி கொள்ளுங்கள்.

பால் இருந்தால் இந்த ரெசிபியை செய்து பாருங்க

கடாயை எடுத்து கொள்ளவும்: 

கடாயை எடுத்து கொள்ளவும்

பின் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கொள்ளவும். எண்ணெய் சூடானதும் அதில் நாம் நறுக்கி வைத்துள்ளதை போட வேண்டும். அவை நன்றாக பொன்னிறமாக மாறியதும் எடுத்து விட வேண்டும்.

அவ்வளவு தான் சுவையான பம்பாய் லக்டி ரெடி. இந்த தீபாவளிக்கு இந்த ரெசிபியை செய்து அசத்துங்கள்.

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்!!!
Advertisement