பிரட் ஊத்தப்பம் சுவையாக செய்வது எப்படி.?

Advertisement

பிரட் ஊத்தப்பம் செய்வது எப்படி ..

உங்க வீட்டில் பள்ளி செல்லும் குழந்தைகள் இருந்தால், அவர்களுக்கு தினமும் வித விதமாக சமைத்தால் தான் சாப்பிடுகிறீர்களா அல்லது அவர்கள் லன்ச் பாக்ஸ் எப்போதும் நீங்கள் கொடுத்து அனுப்பியது அப்படியே வருகிறதா, அதற்கு காரணம் அவர்கள் புது புது விதமான உணவை விரும்புகிறார்கள் என்று அர்த்தம். உங்கள் வீட்டில் பிரட் இருந்தால் இந்த உணவை மிகவும் ஈசியாக செய்து முடித்து விடலாம். வாருங்கள் அப்படி ஒரு ஈஸியான உணவான பிரட் ஊத்தப்பம் செய்வது எப்படி  என்று பார்ப்போம்.bread uththappam

உங்க வீட்ல பிரட் இருக்கா..? அப்போ இந்த ரெசிபி ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க..!

Brade Uththappam Recipe in Tamil:

தேவையான பொருட்கள்:

  1. பிரட் – 5 முதல் 6 துண்டுகள்
  2. ரவா – 2 தேக்கரண்டி
  3. அரிசி மாவு – 2 தேக்கரண்டி
  4. தயிர் – 1/4 கேப்
  5. தண்ணீர் – தேவையான அளவு
  6. உப்பு – தேவையான அளவு
  7. வெங்காயம் – 2
  8. கேரட் – 2
  9. பச்சை மிளகாய் – 2
  10. கொத்தமல்லி – சிறிதளவு
  11. நெய் – தேவைக்கு ஏற்ப

செய்முறை

  1. முதலில் ஒரு பாத்திரத்தில் ரவா, அரிசி மாவு, தயிர் அதனுடன் தேவையான அளவு  தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் ஊற வைக்கவும்.

2. பிறகு பிரட் துண்டுகளை பொடியாக நறுக்கி கொள்ளவும். இந்த பிரட் பொடியை ரவா கலவையில் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து ஒன்றாக கலக்கவும். இந்த மாவு கொஞ்சம் கெட்டியாக இருக்க வேண்டும்.

3. ஒரு கிண்ணத்தில் நறுக்கிய வெங்காயம், துருவிய கேரட், நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி இலைகள் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

5 நிமிடத்தில் பிரட் உப்புமா செய்வது எப்படி?

4. பிறகு தோசைக்கல்லை சூடாக்கி, ரவா மற்றும் Bread கலவைகள் சேர்த்த மாவை தோசையாக ஊற்றி, அதன் மேலே  நறுக்கிய வெங்காயம், கேரட், பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி கலவையை அந்த மாவின் மீது பரப்பவும். அதில் கொஞ்சம் நெய் சேர்த்து சில நிமிடங்கள் வேக வைக்க வேண்டும். பின்னர் அதை மறுபுறம் திருப்பி மேலும் 2 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும்.

அவ்வளவுதான் சுவையான பிரட் ஊத்தப்பம் ரெடி. உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு புதுமையான உணவு வகைகளை சமைத்து கொடுத்து மகிழுங்கள்.

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>  சமையல் குறிப்புகள்
Advertisement