மொறு மொறு பிரட் போண்டா
பொதுவாக நம் அனைவருக்குமே ஸ்நாக்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். அதுவும் குழந்தைகளுக்கு சொல்லவே வேண்டாம். பள்ளியில் இருந்து வரும் போதே இன்னக்கி என்ன ஸ்நாக்ஸ் என்று கேட்டுக்கொண்டே வருவார்கள். நாமும் ஏதாவது ஒரு ஸ்நாக்ஸை செய்து கொடுப்போம். ஆனால் எத்தனை நாள் தான் ஒரே ஸ்நாக்ஸை செய்து கொடுப்பது சொல்லுங்கள். அவர்களுக்கும் சாப்பிட்டு அலுத்து போயிருக்கும். அதனால் இந்த பதிவில் மாலை நேரத்தில் ரசித்து ருசித்து சாப்பிட மொறு மொறு பிரட் போண்டா வீட்டு ஸ்டைலில் செய்து சுவைக்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
மொறு மொறு பிரட் போண்டா செய்ய தேவையான பொருட்கள்:
- பிரட் – 6
- பெரிய வெங்காயம் – 2
- கேரட் – 2
- இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 ஸ்பூன்
- அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன்
- பச்சை மிளகாய் – 3
- கரமசாலா – 1 ஸ்பூன்
- கடலை மாவு – 150 கிராம்
- கொத்தமல்லி – சிறிதளவு
- கருவேப்பிலை – 1 கொத்து
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் – தேவையான அளவு
நீங்க அப்பம் சாப்ட்ருப்பீங்க ஆனா இந்த மாதிரி அப்பம் சாப்பிட்டிருக்க மாட்டீங்க
மொறு மொறு பிரட் போண்டா செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து கொள்ளுங்கள். பின் அதில் 2 பெரிய வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கி சேர்த்து கொள்ளுங்கள்.
பின் அதில் கேரட், பச்சை மிளகாய், கொத்தமல்லி, கருவேப்பிலை, இஞ்சி பூண்டு பேஸ்ட் அரிசி மாவு, கரம்மசாலா மற்றும் உப்பு தேவையான அளவு இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளுங்கள்.
பிறகு கடைசியாக 150 கிராம் கடலை மாவை சேர்த்து அதனுடன் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்த நன்றாக பிசைந்து வைத்து கொள்ளவும். பின் கடைசியாக பிரட்டை கட் செய்து இதனுடன் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
அடுத்து ஒரு தட்டில் நாம் பிசைந்து வைத்துள்ள மாவை உருட்டி எடுத்து கொள்ளவும்.
தின்ன தின்ன திகட்டாத குல்கந்து வெறும் 5 நிமிடத்தில் இப்படி செஞ்சி பாருங்க
கடாயை அடுப்பில் வைக்கவும்:
பின் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் தேவையான அளவு எண்ணெயை ஊற்றி கொள்ளுங்கள். எண்ணெய் சூடானதும் அதில் நாம் உருட்டி வைத்துள்ளதை போட வேண்டும்.
போண்டா பொன்னிறமாக மாறி வந்ததும் எடுத்து விட வேண்டும். அவ்வளவு தான் மாலைநேர தேநீருக்கு சுவையான மொறு மொறு போண்டா ரெடி. இனி இதை ரசித்து சுவைத்து சாப்பிடலாம்.
இந்த மாதிரி ஒரு முறை மொறு மொறு பிரட் போண்டா செய்து பாருங்கள். அருமையாக இருக்கும்.
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |