Bread Masala Recipe in Tamil
இன்றைய காலத்தில் பெரும்பாலானவர்களின் வீட்டில் காலை மற்றும் இரவு உணவாக இருப்பது டிபன் தான். இந்த டிபனில் இட்லி, தோசை, சப்பாத்தி போன்றவை செய்கிறார்கள். இட்லி மாவு அரைத்து வைத்தால் 2 அல்லது மூன்று நாட்களுக்கு வைத்து பயன்படுத்துவோம். அதுவே ஒரு நாளைக்கு மாவு அரைக்க விட்டாலும் என்ன செய்வது என்று புலம்பி கொண்டிருப்போம்.
ஏனென்றால் இட்டலி, தோசையை தவிர வேறு எந்த உணவு செய்தாலும் அவை செய்வதற்கு நேரம் எடுத்து கொள்ளும் என்பதால் அதை செய்ய மாட்டார்கள். சீக்கிரம் செய்வது போல ஏதவாது உணவு இருந்தால் செய்யலாம் என்று நினைப்பார்கள். அதனால் தான் இந்த பதிவில் பிரட் மசாலா செய்வது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாங்க..
பிரட் மசாலா தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை:
தேவையான பொருட்கள் | செய்முறை |
பிரட்- 4 | முதலில் நான்கு பிரட் எடுத்து கொள்ள வேண்டும், இதனை உங்களுக்கு விருப்பமான வடிவத்தில் கட் செய்து கொள்ளலாம். |
வெங்காயம்- 2 | அடுத்து ஒரு கடாய் எடுத்து கொள்ளவும், அதில் நெய் ஒரு தேக்கரண்டி ஊற்றி கொள்ளவும். பின் இதில் நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கி கொள்ளவும். |
தக்காளி- பாதி | பின் இதனுடன் நறுக்கிய வெங்காயம், கேரட், முட்டைகோஸ், குடை மிளகாய் போன்றவை சேர்த்து வதக்க வேண்டும். பின் இதனுடன் பாதி தக்காளியை சிறிது சிறிதாக கட் செய்து எடுத்து கொள்ள வேண்டும். |
கேரட் ,குடைமிளகாய், முட்டைகோஸ் – சிறிதளவு | ஓரளவிற்கு சேர்த்த காய்கறிகள் சுருங்கிய பதம் வந்த பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும். |
மிளகாய் தூள், கரம் மசாலா தூள்- காரத்திற்கேற்ப | அடுத்து மசாலா சேர்ப்பதற்கு கரம் மசாலா தூள், மிளகாய் தூள், தேவையான உப்பு சேர்த்து வதக்க வேண்டும். |
உப்பு- தேவையான அளவு | பிறகு இதில் தக்காளி சாஸ், சோயா சாஸ் போன்றவை சேர்த்து வதக்க வேண்டும். |
தக்காளி சாஸ், சோயா சாஸ் | சேர்த்த காய்கறி எல்லாம் வெந்து சுருங்கிய பதம் வந்த பிறகு கட் செய்து வைத்துள்ள பிரட்டை சேர்த்து கொள்ள வேண்டும். |
இஞ்சி பூண்டு பேஸ்ட்- 1 தேக்கரண்டி | பிரட்டில் சேர்த்த பொருட்கள் எல்லாம் மிக்ஸ் ஆன பிறகு வேறொரு பாத்திரத்தில் சேர்த்து பரிமாறலாம். |
இட்லி மாவு இல்லாமலே சுவையான ரெசிபி அதுவும் 10 நிமிடத்தில் செய்யலாம் வாங்க..!👇
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள்!!! |