மொறுமொறு பிரட் பக்கோடா செய்வது எப்படி..?

Advertisement

Bread Pakoda Recipe in Tamil

பொதுவாக இல்லத்தரசிகள் என்ன ஸ்நாக்ஸ் செய்வது என்று குழப்பமான சூழ்நிலையில் இருப்பார்கள். அந்த வகையில் செய்து கொடுக்கும் ஸ்நாக்ஸ் குழந்தைகளுக்கு பிடித்த முறையில் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அதனால் பலவிதமான ஸ்நாக்ஸ் செய்து வந்தாலும், புதுமையான முறையில் செய்து கொடுத்தால் தான் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். அதனால் இன்றைய பதிவில் மொறுமொறு பிரட் பக்கோடா செய்வதை பற்றி கீழே பார்த்து தெரிந்து கொள்வோம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

பிரட் பக்கோடா செய்ய தேவையான பொருட்கள்: 

  • பிரட் –
  • பெரிய வெங்காயம் –
  • பச்சை மிளகாய் – 4
  • குடை மிளகாய் –
  • உப்பு- தேவையான அளவு
  • மஞ்சள் தூள் – 1/4 டேபுள் ஸ்பூன்
  • சீரகம் – 1/2 டேபுள் ஸ்பூன்
  • பெருங்காயத்தூள் – 1/2 டேபுள் ஸ்பூன்
  • கடலை மாவு – 4 டேபுள் ஸ்பூன்
  • எண்ணெய் – தேவையான அளவு

பிரட் பக்கோடா செய்முறை:  

ஸ்டேப்: 1

 bread pakoda in tamil

முதலில் மிக்சியை எடுத்து கொண்டு, அதில் பிரட், பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் இந்த மூன்று பொருளையும் சேர்த்து தண்ணீர் விடாமல் அரைத்து விட்டு, ஒரு பவுலுக்கு மாற்றவும்.

பின்பு அதில் பெரிய வெங்காயம், குடை மிளகாய், தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், சீரகம், பெருங்காய தூள் மற்றும் கடலை மாவு சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு நன்றாக கெட்டியான நிலை வரும் வரை நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.

உங்க வீட்டில் உருளைக்கிழங்கு உள்ளதா.  அப்போ இந்த ரெசிபியை ஒருமுறை செய்து பாருங்கள்

ஸ்டேப்: 2

 bread pakoda recipe in tamil

அடுத்ததாக ஒரு கடாயை எடுத்து கொண்டு, அதில் எண்ணெயை ஊற்றி எண்ணெய் சூடான பின்பு பிசைந்து வைத்த பிரட் மசாலாவை பக்கோடா முறையில் எண்ணெயில் போட்டு கொள்ளவும். பக்கோடா சில நேரத்திற்கு பின்பு நிறம் மாறி பொன்னிறமாக வந்தவுடன் ஒரு பவுலுக்கு மாற்றினால் பிரட் பக்கோடா தயார்.

சப்பாத்தியை யாரும் இப்படி செஞ்சிருக்க மாட்டீங்க 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil
Advertisement