கோதுமை மாவு ரெசிபி – Breakfast Recipe
தோழிகள் மற்றும் தோழர்களுக்கு அன்பு கலந்த வணக்கம்.. இன்று நாம் அருமையான சுவையில் வெறும் 10 நிமிடத்தில் கோதுமை மாவை பயன்படுத்தி ஒரு ரெசிபி செய்ய போறோம். இந்த டிஷ் குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும் விரும்பி சாப்பிடுவார்கள். சரி வாங்க இந்த டிஷ் எப்படி செய்யணும் என்னென்ன பொருட்கள் தேவைப்படும் என்று இப்பொழுது நாம் பார்க்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
தேவையான பொருட்கள்:
- கோதுமை மாவு – 1½ கப்
- கேரட் துருவியது – ஒன்று
- பெரிய வெங்காயம் – இரண்டு பொடிதாக நறுக்கியது
- பச்சைமிளகாய் – இரண்டு பொடிதாக நறுக்கியது
- கருவேப்பிலை – சிறிதளவு பொடிதாக நறுக்கியது
- சீரகம் – அரை ஸ்பூன்
- இஞ்சி – பொடிதாக நறுக்கியது சிறிதளவு
- மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- மிளகாய் தூள் – கால் ஸ்பூன்
- உடைத்த நிலக்கடலை – மூன்று ஸ்பூன்
- பொடிதாக நறுக்கிய கொத்தமல்லி சிறிதளவு
- எண்ணெய் – தேவையான அளவு
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
உருளைக்கிழங்கு இருந்தா போதும் Simple ஈவினிங் டீ டைம் ஸ்னாக்ஸ் தயார்..!
செய்முறை:
அடுப்பில் ஒரு கடாய் வைத்து அவற்றில் மூன்று டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடேற்றவும்.
எண்ணெய் சூடானதும் அரை ஸ்பூன் சீரகம், பொடிதாக நறுக்கிய வெங்காயம் இரண்டையும் செய்து ஓரளவு வதக்கவும்.
வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வந்ததும் பொடிதாக நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய், கருவேப்பிலை, இஞ்சி ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும்.
பிறகு துருவி வைத்துள்ள கேரட் மற்றும் மிளகாய் தூளை சேர்த்து நன்றாக வதக்கவும். அணைத்து பொருட்களும் நன்கு வறுபட்டதும் அடுப்பை அணைத்து வதக்கிய மசாலாவை ஆறவைக்கவும்.
பிறகு ஒரு அகலமா பவுலை எடுத்துக்கொள்ளுங்கள் அவற்றில் கோதுமை மாவை கொட்டி தேவையான அளவு உப்பு மற்றும் வதக்கி வைத்துள்ள மசாலாவை சேர்த்து ஒரு முறை பிசைந்து கொள்ளுங்கள் பிநௌ சிறிதளவு தண்ணீர் தெளித்து கோதுமை மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும் அவ்வளவு தான் மாவு தயார்.
இதனை சப்பாத்திக்கு தேய்ப்பது போல் தேய்த்து சுட்டு எடுத்தால் போதும் அருமையான சுவையில் பிரேக்பாஸ்ட் தயார் ஆகிவிடும்.
அனைவரும் சுவைத்து மகிழ்வார்கள் கண்டிப்பாக இந்த ரெசிபியை செய்து பாருங்கள் நன்றி வணக்கம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
10 நிமிடத்தில் மொறுவலான ஈவ்னிங் ஸ்னாக்ஸ் அதுவும் உருளைக்கிழங்கில் செய்யலாம் வாங்க..!
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |