நாவிற்கு சுவை தரும் மணமான பட்டர் சிக்கன் செய்வது எப்படி..?

Advertisement

Butter Chicken Seimurai

வாரத்தில் ஒருநாளான ஞாயிற்றுக்கிழமை வந்தால் போதும் பெரும்பாலான வீடுகளில் மீன், மட்டன், சிக்கன் மற்றும் இறால் என இத்தகைய ரெசிபிகள் அனைத்தும் சமைத்து சாப்பிடுவார்கள். அப்படி பார்த்தால் இத்தனை வகையான ரெசிபிகள் இருந்தாலும் கூட எப்போது சிக்கன் கிரேவி, மீன் வறுவல் மற்றும் மட்டன் கிரேவி என செய்த ரெசிபியை தான் மாற்றி மாற்றி செய்வார்கள். அதனால் தான் இன்றைய பதிவில் இந்த வார ஞாயிற்றுக்கிழமை மட்டும் இல்லாமல் மற்ற கிழமைகளிலும் அசைவம் சமைக்கும் தாய்மார்களுக்கு ஏற்ற மாதிரியான ரெசிபியை செய்வது எப்படி என்று தெரிந்துக்கொள்ள போகிறோம். அதாவது பட்டர் சிக்கன் செய்வது எப்படி என்று தான் விரிவாக பார்க்கப்போகிறோம். சரி வாருங்கள் பதிவை தொடர்ச்சியாக படித்து பார்க்கலாம்..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

பட்டர் சிக்கன் செய்வது எப்படி..?

பொருட்களின் அளவு செய்முறை விளக்கம்
சிக்கன்- 350 கிராம் முதலில் எடுத்துவைத்துள்ள சிக்கனை நன்றாக தண்ணீரில் அலசு நறுக்கி வைத்து விடுங்கள்.
மிளகாய் தூள்- 1 ஸ்பூன் இப்போது ஒரு பவுலில் சிக்கன், மிளகாய் தூள், தயிர் சேர்த்து 2 நிமிடம் வரை நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
தயிர்- 2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட்- 2 ஸ்பூன்
எலுமிச்சை சாறு- 1/2 ஸ்பூன் 2 நிமிடம் கழித்து கலந்து வைத்துள்ள பொருளுடன் எலுமிச்சை சாறு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து 20 நிமிடம் அப்படியே வைத்து விடுங்கள்.
உப்பு- தேவையான அளவு
எண்ணெய்- தேவையான அளவு அதன் பின்பு அடுப்பில் ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அதில் மசாலா தடவிய சிக்கனை சேர்த்து வேக வைத்து தனியாக எடுத்துக் கொள்ளுங்கள்.
வெங்காயம்- 1 பின்பு அதே கடாயில் நறுக்கிய வெங்காயம், தக்காளியை சேர்த்து வதக்கி கொள்ளுங்கள்.
தக்காளி- 2
மிளகாய் தூள்- 1 ஸ்பூன் அடுத்து கடாயில் உள்ள பொருளுடன் மிளகாய் தூள், மல்லித்தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பின்பு அதை ஆற வைத்து மிக்சி ஜாரில் சேர்த்து பேஸ்ட் போல அரைத்து கொள்ளுங்கள்.
மல்லித்தூள்- 1/2 ஸ்பூன்
இஞ்சி, பூண்டு பேஸ்ட்
பட்டர்- தேவையான அளவு கடைசியாக அடுப்பில் மற்றொரு கடாயினை வைத்து அதில் பட்டர், கிராம்பு, பிரியாணி இலை, உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து 2 நிமிடம் கலந்து கொள்ளுங்கள்.
பட்டர் சிக்கன் மசாலா தயார் 2 நிமிடம் கழித்து அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் சிக்கனை சேர்த்து நன்றாக 10 நிமிடம் வரை கொதிக்க விட்டு இறக்கினால் பட்டர் சிக்கன் மசாலா தயார்.

kerala mutton roast recipe in tamil

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்!!!
Advertisement