Cabbage Manchurian Recipe in Tamil
முட்டைகோஸில் பொரியல், வறுவல் செய்து தான் சாப்பிட்ருப்போம். பொதுவாக ஒரே மாதிரியான உணவை மறுபடியும் மறுபடியும் செய்து கொடுத்தால் சாப்பிடுபவர்களுக்கும் சரி, சமைப்பவர்களுக்கும் சரி அலுத்து போகிவிடும். அதனால் இன்றைய பதிவில் முட்டைகோஸை வைத்து மஞ்சூரியன் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👉 https://bit.ly/3Bfc0Gl |
முட்டைகோஸ் மஞ்சூரியன் செய்ய தேவையான பொருட்கள்:
முட்டைகோஸ்-பாதி அளவு
வெங்காயம்- 2
கரம் மசாலா தூள்-1/ 4 தேக்கரண்டி
மிளகாய் தூள்- 2 தேக்கரண்டி
சோள மாவு- 3 தேக்கரண்டி
மைதா மாவு- 5 தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு
எண்ணெய்- 100
இஞ்சி பூண்டு பேஸ்ட்- 2 தேக்கரண்டி
முட்டைகோஸ் மஞ்சூரி செய்முறை:
முதல் பாதி முட்டைகோஸை சிறிது சிறிதாக கட் செய்து கொள்ளவும். அதனுடன் 1 வெங்காயத்தையும் சிறிது சிறிதாக சேர்த்து கட் செய்து செய்து கொள்ளவும். இதனுடன் 1/4 தேக்கரண்டி கரம் மசாலா தூள், 2 தேக்கரண்டி மிளகாய் தூள், சோள மாவு 3 தேக்கரண்டி, மைதா மாவு 5 தேக்கரண்டி, தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும். சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும். இதனை சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.
எப்போதும் போல் சட்னி செய்யாமல் கர்நாடகா ஸ்டைல் சட்னி செய்து கொடுங்கள்
பிறகு அடுப்பில் கடாய் வைத்து பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கொள்ளவும். எண்ணெய் சூடானதும் உருட்டி வைத்த உருண்டைகளை சேர்த்து பொரித்தெடுக்கவும்.
அடுத்து ஒரு கடாயில் 3 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து கொள்ளவும். எண்ணெய் சூடானதும் 2 நறுக்கிய வெங்காயம், 2 காய்ந்த மிளகாய், 2 தேக்கரண்டி இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி கொள்ளவும். இதில் கார்த்திகேற்ப மிளகாய் தூள் சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும். 2 தக்காளியை மிக்சியில் சேர்த்து அரைத்து அதனையும் இதனுடன் சேர்த்து வதக்கி கொள்ளவும். இதன் பச்சை வாசனை நீங்கி, எண்ணெய் பிரிந்த நிலை வந்ததும், சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும். இதில் பொரித்து வைத்திருந்த முட்டைகோசையும் சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும். 2 நிமிடம் கழித்து சிறிதளவு கொத்தமல்லி சேர்த்து இறக்கி விடவும்.
இட்லி, கல் தோசைக்கு ஏற்ற கூரை கடை சட்னி செய்து சாப்பிடுங்கள்
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal Kurippugal |