Cabbage Rice Recipe in Tamil
வேலைக்கு செல்கிறவர்களுக்கு மற்றும்பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு மதிய சாப்பாடு செய்து கொடுப்பார்கள். இதில் அதிகமாக செய்ய கூடிய உணவாக தயிர் சாதம், லெமன் சாதம், புளி சாதம் போன்றவை செய்து கொடுப்போம். அப்படி இல்லையென்றால் குழம்பு தனியாகவும், சாதம் தனியாகவும் வைத்து கொடுப்பார்கள். அதுமட்டுமில்லாமல் தினமும் புது புதுசாக லன்ச் செய்து கொடுக்க நினைக்கிறார்கள். ஆனால் அதற்கான நேரம் அதிகமாக எடுக்குமோ என்று யாரும் ட்ரை செய்வதில்லை. ஆனால் இந்த பதிவில் 10 நிமிடத்தில் செய்ய கூடிய முட்டைகோஸ் சாதத்தை பற்றி தான் தெரிந்து கொள்ள போகின்றோம்.
முட்டைகோஸ் சாதம் செய்ய தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை:
தேவையான பொருட்கள் |
செய்முறை |
முட்டைகோஸ்- ஒரு கப் |
முதலில் சாதத்தை வடித்து வைத்து கொள்ள வேண்டும். |
வெங்காயம்- 3 |
அடுத்து வெங்காயம் எடுத்து அதனை நீட்ட வாக்கில் நறுக்கி கொள்ள வேண்டும். பச்சை மிளகாய் வட்ட வட்டமாக நறுக்கி கொள்ள வேண்டும். இதனுடன் இஞ்சி மற்றும் பூண்டை சிறியதாக நறுக்கி கொள்ள வேண்டும். |
இஞ்சி, பூண்டு – சிறிதளவு |
முட்டைகோஸை நீட்ட வாக்கில் எவ்வளவு நைசாக கட் செய்ய முடியுமோ அவ்வளவு நைசாக கட் செய்து கொள்ளவும். |
பச்சை மிளகாய்- 1 |
முட்டைகோஸ் சாதம் செய்வதற்கு கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய இஞ்சி மற்றும் பூண்டை சேர்த்து வதக்க வேண்டும். |
மிளகாய் தூள்- 1 தேக்கரண்டி |
அடுத்து இதனுடன் கருவேப்பிலை மற்றும் வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயமானது சிவந்த நிறம் வரும் வதக்க வேண்டும். |
மஞ்சள் தூள்- 1/2 தேக்கரண்டி |
வெங்காயம் சிவந்த நிறம் வந்ததும் மிளகாய் தூள், கரம் மசாலா தூள், மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்க வேண்டும். |
எண்ணெய்- 3 தேக்கரண்டி |
பச்சை பட்டாணியை ஊற வைத்து அதனை வேக வைத்து எடுத்து கொள்ள வேண்டும். இதனையும் வெங்கயத்துடன் சேர்க்க வேண்டும். |
கரம் மசாலா தூள்- 1 தேக்கரண்டி |
பின் அதனுடன் மிளகு தூள் சேர்த்து வதக்க வேண்டும். லேசாக தண்ணீர் தெளித்து வேக விட வேண்டும். |
மிளகு தூள்- 1/2 தேக்கரண்டி |
மசாலாவில் பச்சை வாசனை மற்றும் முட்டைகோஸ் வெந்த பிறகு அதில் வேக வைத்துள்ள சாதத்தை கிளறினால் முட்டைகோஸ் சாதம் ரெடி.! |
பச்சை பட்டாணி- 1/4 கப் |
ஒரு முறை இந்த சாதத்தை செஞ்சு உங்க குழந்தைகளுக்கு கொடுங்க விரும்பி சாப்பிடுவாங்க.. |
சுவையான மற்றும் சூப்பரான லன்ச் உருளைக்கிழங்கு சாதம் செய்முறை..!👇
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> |
சமையல் குறிப்புகள்!!! |