Carrot Chutney Recipe in Tamil
இட்டலி, தோசை என்றால் சட்னி, சாம்பார், பொடி என்று ஏதவாது இருந்தால் தான் சாப்பிட முடியும். அதுவும் வித்தியாசமாகவும், ருசியாகவும் இருந்தால் எப்பொழுதும் சாப்பிடும் அளவை விட சற்று கூடவே சாப்பிடுவோம். ஆனால் நம் வீட்டில் உள்ள தாய்மார்கள் புதிதாக சட்னி அல்லது ரெசிபி செய்ய வேண்டும் என்று நிறைய தேடுகின்றனர். அந்த வகையில் இன்றைய பதிவில் கேரட்டில் சட்னி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
| உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
கேரட் சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
- கேரட்- 100
- வெங்காயம்- 1
- தக்காளி- 1
- கொத்தமல்லி- சிறிதளவு
- கடலைப்பருப்பு- 1தேக்கரண்டி
- உளுத்தப்பருப்பு- 1 1/2 தேக்கரண்டி
- எண்ணெய்- 2 தேக்கரண்டி
ஒரு நிமிடத்தில் இட்லி தோசைக்கு சூப்பரான சட்னி..! வறுத்து அரைக்க வேண்டியதில்லை..!
கேரட் சட்னி செய்முறை:

அடுப்பில் கடாய் வைத்து 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி கொள்ளவும். அதில் 1 தேக்கரண்டி கடலை பருப்பு, 1 1/2 தேக்கரண்டி உளுத்தப்பருப்பு, காய்ந்த மிளகாய் 5 சேர்த்து வதக்கி கொள்ளவும்.
பின் அதனுடன் நறுக்கிய வெங்காயம் 1, நறுக்கிய தக்காளி 1 சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கி கொள்ளவும்.
அடுத்து 100 கிராம் கேரட் எடுத்து அதை தோல் சீவி சிறியதாக நறுக்கி கொள்ளவும். இதனையும் வெங்காயம், தக்காளியோடு சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும். பின் இதில் கொத்தமல்லி சிறிதளவு சேர்த்து வதக்கி கொள்ளவும். வதக்கி வைத்த பொருட்கள் ஆறியதும், மிக்சியில் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
பிறகு தாளிப்பதற்கு எண்ணெய் ஊற்றி அதில் கடுகு 1 தேக்கரண்டி, காய்ந்த மிளகாய் 1 , கருவேப்பிலை சிறிதளவு சேர்த்து வதக்கி விடவும். பின் இதில் அரைத்து வைத்த சட்னியை சேர்த்து கலந்து கொள்ளவும்.
காலை உணவுக்கு ஏற்ற சூப்பரான கொய்யா சட்னி இப்படி செஞ்சி பாருங்க..!
| இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |














