கேரட் பிடிக்கதவுங்களுக்கு கூட இப்படி செய்து கொடுத்தால் வேணாமுன்னு சொல்லாம சாப்பிடுவாங்க

Advertisement

கேரட் வறுவல் 

பொதுவாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கேரட், பீட்ரூட் போன்ற காய்கறிகள் பிடிக்காது. ஆனால் இந்த காய்கறிகளில் சத்துக்கள் நிறைந்துள்ளதால் பெற்றோர்கள் குழ்நதைகளை எப்படியாவது சாப்பிட வைக்க வேண்டும் என்று நினைப்பார்கள். இதற்காக கேரட் சாதம், கேரட் பொரியல், கேரட் ஜூஸ் போன்றவை செய்து கொடுப்பார்கள். இப்படி செய்து கொடுத்தாலும் சில பேர் விரும்ப மாட்டார்கள். அதனால் தான் குழந்தைகளுக்கும் பிடித்த மாதிரியும் சாதத்திற்கு ஏற்ற வறுவலாகவும் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

கேரட் வருவலுக்கு செய்ய தேவையான பொருட்கள்:

கேரட் வறுவல் செய்முறை

கேரட் வருவலுக்கு செய்ய தேவையான பொருட்கள் கேரட் வறுவல் செய்முறை
கேரட்- 5 முதலில் மசாலா அரைப்பதற்கு கடாய் வைத்து அதில் நிலக்கடலை, மல்லி, சீரகம், உளுத்தப்பருப்பு, வெள்ளை எள் சேர்த்து வதக்கி மிக்சி ஜாரில் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

அடுத்து கேரட்டை சிறியதாக உங்களுக்கு விருப்பப்பட்ட வடிவத்தில் இட்லி பானையில் வைத்து ஆவியில் 10 நிமிடத்தில் வேக வைத்து கொள்ளவும்.

அடுத்து கடாய் வைத்து அதில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தப்பருப்பு, கருவேப்பிலை சேர்த்து வதக்கவும், அதனுடன் வெங்காயம், பூண்டு சேர்த்து சிவந்த நிறம் வரும் வரை வதக்க வேண்டும்.

வெங்காயம் சிவந்த நிறம் வந்ததும், மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்க வேண்டும். அதனுடன் வேக வைத்த கேரட்டை சேர்த்து வதக்க வேண்டும். மசாலாவின் பச்சை வாசனை போன பிறகு செய்து வைத்துள்ள மசாலாவையும் சேர்த்து வதக்க 10 நிமிடம் குறைந்த தீயிலே வைத்து வேக விடவும்.

ஆயில்- 1 தேக்கரண்டி
கடுகு- 1/ தேக்கரண்டி
உளுந்தப்பருப்பு- 1/ தேக்கரண்டி
வெங்காயம்-1
பூண்டு- 5
மஞ்சள் தூள்- சிறிதளவு
மிளகாய் தூள்- கார்த்திகேற்ப
நிலக்கடலை- 1 தேக்கரண்டி
மல்லி- 1 தேக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி
உளுத்தப்பருப்பு- 1 தேக்கரண்டி
வெள்ளை எள்- 1 தேக்கரண்டி

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil

 

Advertisement