Carrot Halwa Recipe in Tamil
குழந்தைகள் பெருபாலும் காய்களை உண்பது மிகவும் குறைவுதான். என்ன தான் கட்டாயப்படுத்தி சாப்பிட செய்தலும் பலன் ஸிரோ தான். அந்த காய்களை கொண்டு அவர்களுக்கு பிடித்த இனிப்பு சுவையில் எதாவது ஒரு உணவு செய்துகொடுத்தல் கண்டிப்பாக அதை அவர்கள் உண்பார்கள். காய்கறிகள் உடல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. அதனால் கண்டிப்பாக குழந்தைகளுக்கு காய்களை அவர்களின் உணவுகளின் முக்கிய பகுதியாக மாற்ற வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. வயதானவர்களுக்கு சர்க்கரை அளவு கட்டுபடுத்த இனிப்பு வகைகளை நாம் தருவதில்லை. இந்த இரண்டு பிரச்சனைக்கும் ஒரே தீர்வு கேரட். ஆமாங்க, இன்றைய பதிவில் பெரியவர்கள் அதிகம் வெறுக்கும் கேரட்டை வைத்து ஒரு அருமையான ரெசிபி செய்வது எப்படி என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கும், வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கும் ஏதாவது சுவையாக செய்து கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் இதை செய்து கொடுங்கள். இந்த ஹல்வா ரெசிபி இனி கடைகளில் வாங்கி சாப்பிட தேவையில்லை. சுலபமான முறையில் வீட்டிலேயே செய்து சாப்பிடலாம். கேரட் ஹல்வா எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க..!
| உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
தின்ன தின்ன திகட்டாத கேரட் ஹல்வா செய்வது எப்படி..?
கேரட் ஹல்வா செய்ய தேவையான பொருட்கள்:
கேரட் – 5 முதல் 6
பால் – 250 ml
நெய் – 2 தேக்கரண்டி
சர்க்கரை – தேவைக்கு ஏற்ப
உப்பு – தேவைக்கு ஏற்ப
ஏலக்காய், முந்திரி,திராட்சை – 5 அல்லது 6
கேரட் ஹல்வா செய்முறை:
6 அல்லது 7 கேரட்களை காய்கறி பீலரைப் பயன்படுத்தி உதிரியாக துருவிக்கொள்ளவும்.
பிறகு ஒரு கனமான கடாயில், துருவிய கேரட் அனைத்தையும் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
பிறகு அதில் 4 கப் பால் சேர்த்து வதக்கவும்.
துருவிய கேரட் மற்றும் பால் ஒன்றாக கலக்கும் வரை குறைந்த வெப்பத்தில் வதக்கவும். இந்த கலவையில் தண்ணீர் குறையும் வரை கிளறவும்.
பிறகு அதில் நெய் சேர்க்கவும். நெய்யும் கேரட் மற்றும் பாலுடன் நன்றாக கலக்கும் வரை வதக்க வேண்டும். பால் நன்றாக சுண்டிய பிறகு தேவைக்கு ஏற்ப உப்பு சேர்த்துக்கொள்ளவும்.
அதனுடன் உங்களின் தேவைக்கு ஏற்ப சர்க்கரையை சேர்த்துக்கொள்ளவும். சர்க்கரை நன்றாக இளகிய பின்னர் 5 முதல் 6 ஏலக்காய் சேர்க்கவும்.
இந்த ஹல்வா கிளறிக்கொண்டே இருக்க வேண்டும் இல்லை என்றால் சரியான பதம் கிடைக்காது.
கேரட் ஹல்வா சரியான பதத்தில் தயாராகும் சமயத்தில், அதில் இருந்து நெய் பிரிந்து வர ஆரம்பிக்கும் அதுவரை நீங்கள் அதனை நன்றாக கிளறிகொண்டு இருக்க வேண்டும்.
நெய் தனியாக பிரிந்த உடன் முந்திரி மற்றும் திராட்சை சேர்த்து இறக்கவும்.
இப்போது சுவையான கேரட் ஹல்வா ரெடி…
மட்டன் சுவையை மிஞ்சும் சுவையான சைவ மீல்மேக்கர் மஞ்சூரியன் இப்டி செய்ங்க அடிக்கடி செய்வீங்க…
| இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |














