ஐயோ கேரட்டா எனக்கு வேண்டாம்பா என்று சொல்லாமல் இருக்க ருசியான கேரட் கோலா உருண்டை செய்து கொடுங்கள்..!

Advertisement

Carrot Kola Urundai Seivathu Eppadi

நம்முடைய வீடுகளில் சமைக்கும் சாப்பாட்டினை நாம் எப்போதும் பிடித்து தான் சாப்பிடுகிறோமா என்று கேட்டால் அது தான் கிடையாது. ஏனென்றால் உருளைக்கிழங்கினை நாம் சாப்பிடும் அளவில் பாதி பங்கு கூட சத்துக்கள் நிறைந்த கேரட், பீட்ரூட், கீரை வகைகளை சாப்பிடுவது இல்லை. இவற்றை சாப்பிட வைக்க வேண்டும் என்று நீங்கள் என்ன தான் வித விதமான முறையில் ரெசிபியினை சமைத்து கொடுத்தாலும் கூட அவர்கள் அதனை எளிதில் சாப்பிட மாட்டார்கள். இனி உங்களுக்கு இது மாதிரி பிரச்சனை இருக்காது. அதிலும் குறிப்பாக இனி யாரும் ஐயோ கேரட்டா எனக்கு வேண்டாம்பா என்று யாரும் சொல்லாமல் இருக்க அருமையான ருசியில் கேரட் கோலா உருண்டை எப்படி செய்வது என்று தான் இன்றைய பதிவில் தெரிந்துக்கொள்ள போகிறோம். ஆகையால் பதிவை தொடர்ந்து படித்து செய்முறை விளக்கத்தினை தெரிந்துக்கொள்ளுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

கேரட் கோலா உருண்டை:

கேரட் கோலா உருண்டை செய்மறை

  • கேரட்- 1/4 கிலோ
  • வெங்காயம்- 200 கிராம்
  • பச்சை மிளகாய்- 4
  • உப்பு- தேவையான அளவு
  • எண்ணெய்- தேவையான அளவு

கோலா அரைக்க தேவையான பொருட்கள்:

  1. புழுங்கல் அரிசி- 2 ஸ்பூன்
  2. கடலை பருப்பு- 2 ஸ்பூன்
  3. துருவிய தேங்காய்- சிறிதளவு
  4. சோம்பு- 1/2 ஸ்பூன்
  5. பூண்டு- 3 பல்
  6. நறுக்கிய இஞ்சி துண்டு- சிறிதளவு

கேரட் கோலா உருண்டை செய்மறை:

பொருட்களை ஊற வைத்தல் முதலில் அரிசி மற்றும் கடலை பருப்பினை 4 மணி நேரம் வரை தண்ணீரில் ஊற வைத்து பின்பு அதனை வடிகட்டி கொள்ளுங்கள்.
மிக்சியில் பொருட்களை சேர்த்தல் அதன் பிறகு கோலா அரைக்க வைத்துள்ள பொருட்கள் மற்றும் வடிகட்டிய அரிசி, கடலை பருப்பினை அதில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து பவுலில் வைத்து விடுங்கள்.
மாவு தயார் செய்தல் இப்போது பவுலில் உள்ள மாவுடன் வெங்காயம், பச்சை மிளகாயினை நறுக்கிய அதனுடன் சேர்த்து கொள்ளுங்கள்.
கேரட் சேர்த்தல் கடைசியாக மாவுடன் துருவிய கேரட் மற்றும் தேவையான அளவு உப்பு, கறிவேப்பிலை சேர்த்து 5 நிமிடம் வரை பிசைந்தால் போதும் கோலா உருண்டை மாவு தயார்.
கடாயில் எண்ணைய் சேர்த்தல் அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்த பிறகு அதில் மாவில் இருந்து சிறிதளவு எடுத்து கோலா போல உருட்டி எண்ணெயில் போட்டு விடுங்கள்.
கோலா உருண்டை தயார் பின்பு கோலா உருண்டை பொன் நிறமாக வந்தவுடன் எடுத்து விடுங்கள். அவ்வளவு தான் சுவையான கேரட் கோலா உருண்டை தயார். இதனை போலவே மற்றதையும் செய்து விடுங்கள்.

புரட்டாசில மட்டன் கோலா உருண்டை சாப்புட முடியலயா.. அப்போ வாங்க அதே டேஸ்ட்ல வெஜ் கோலா உருண்டை செய்யலாம் 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil
Advertisement