பக்ரீத் ஸ்பெஷல் கேரட் பாயாசத்தை ஒரே ஒருமுறை செய்து சுவைத்து பாருங்க மீண்டும் மீண்டும் செய்து சுவைப்பீங்க..!

Advertisement

Carrot Payasam Recipe in Tamil

பொதுவாக ஏதாவது விழா அல்லது சிறப்பு நாட்கள் என்று ஒன்று வந்துவிட்டலே நாம் அனைவருக்குமே ஏதாவது ஒரு இனிப்பு செய்து சுவைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதிலும் குறிப்பாக ஏதாவது ஒரு புதிய வகையான இனிப்பினை செய்து சுவைக்க வேண்டும் என்ற ஆசை நாம் அனைவருக்குமே இருக்கும். ஆனால் நாம் அனைவருக்குமே அப்பொழுதெல்லாம் கேசரி அல்லது பால் பாயாசம் போன்றவற்றையே செய்து சுவைப்போம். அதனால் தான் இன்றைய பதிவில் ஏதாவது விழா அல்லது சிறப்பு நாட்களில் செய்து சுவைப்பதற்கு ஏற்ற கேரட் பாயாசம் செய்வது எப்படி என்பதை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இந்த கேரட் பாயசத்தை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்து மகிழுங்கள்.

கேரட் பாயாசம் செய்வது எப்படி..?

carrot payasam

உங்கள் வீட்டிலேயே மிகவும் எளிமையான முறையில் கேரட் பாயாசம் செய்வது எப்படி என்பதை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க. அதற்க்கு முன்பு இந்த பாயாசம் செய்வதற்கு தேவையான பொருட்களை முதலில் பார்க்கலாம்.

 1. கேரட் – 3
 2. காய்ச்சிய பால் – 1/2 லிட்டர் 
 3. சர்க்கரை – 3 டேபிள் ஸ்பூன் 
 4. பேரீச்சம்பழம் – 20
 5. பாதாம் – 20
 6. பிஸ்தா – 20 
 7. முந்திரி – 20 
 8. தேங்காய் துருவல் – 1/2 கப் 
 9. ஏலக்காய் தூள் – 2 சிட்டிகை 
 10. நெய் – 2 டேபிள் ஸ்பூன் 
 11. தண்ணீர் – தேவையான அளவு 

இட்லி, சப்பாத்தி, தோசை ஆகியவற்று ஏற்ற கடாய் காளான் இப்படி ஒருமுறை செய்து சுவைத்து பாருங்க

செய்முறை:

ஸ்டேப் – 1

முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 3 கேரட்டுகளை நன்கு சுத்தம் செய்துவிட்டு சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள். பின்னர் அதனை லேசாக வேகவைத்து ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நன்கு பசைபோல் அரைத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப் – 2

பிறகு நாம் எடுத்து வைத்துள்ள 20 பேரீச்சம்பழங்களை அதனின் விதைகளை நீக்கிவிட்டு சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள்.

ஸ்டேப் – 3

அடுத்து நாம் எடுத்து வைத்துள்ள 20 பாதாம், 20 பிஸ்தா, 20 முந்திரி ஆகியவற்றை நன்குஇ பொடி பொடியாக நறுக்கி கொள்ளுங்கள்.

பின்னர் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் 2 டேபிள் ஸ்பூன் நெயை ஊற்றி அதில் நாம் நறுக்கி வைத்துள்ள பாதாம், பிஸ்தா, முந்திரி மற்றும் 1/2 கப் தேங்காய் துருவல் ஆகியவற்றை சேர்த்து நன்கு வறுத்து எடுத்து வைத்து கொள்ளுங்கள்.

பக்ரீத் ஸ்பெஷல் மட்டன் பிரியாணி செய்வது எப்படி

ஸ்டேப் – 4

பிறகு அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் 3 டேபிள் ஸ்பூன் சர்க்கரை மற்றும் நாம் முன்னரே நறுக்கி வைத்துள்ள பேரீச்சம்பழங்களை சேர்த்து தேவையான அளவு தண்ணீரை ஊற்றி நன்கு வேகவைத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப் – 5

simple carrot payasam recipe

பின்னர் அதனுடன் நாம் அரைத்து வைத்துள்ள கேரட் பசையை சேர்த்து நன்கு கலந்து வேகவைத்து கொள்ளுங்கள். பிறகு அதில் எடுத்து வைத்துள்ள 1/2 லிட்டர் காய்ச்சிய பாலினை சேர்த்து நன்கு கொதிக்கவிடுங்கள்.

இறுதியாக அதி நாம் வறுத்து வைத்துள்ள பாதாம், பிஸ்தா, முந்திரி மற்றும் 1/2 கப் தேங்காய் துருவல் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து அனைவருக்கும் பரிமாறுங்கள்.

இப்பொழுது நமது மிகவு சுவையான கேரட் பாயாசம் தயாராகிவிட்டது வாங்க சுவைக்கலாம். நீங்களும் இந்த கேரட் பாயசத்தை ஒருமுறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து தந்தீர்கள் என்றால் மீண்டும் மீண்டும் செய்து தருமாறு கேட்பார்கள்.

 உங்களுக்கு இது போன்ற முக்கிய தகவல்கள், அழகு குறிப்புகள், ஆன்மீக தகவல்கள்,சமையல் குறிப்புகள் போன்றவைற்றை தெரிந்துகொள்ள பொதுநலம் வலைத்தளத்தை பின்தொடருங்கள்.

பக்ரீத் ஸ்பெஷல் மட்டன் கபாப் செய்து பாருங்க

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal Kurippugal
Advertisement