Carrot Payasam Recipe in Tamil
இன்றைய காலகட்டத்தில் உள்ள சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்குமே தினமும் ஏதாவது ஒரு உடல்நல பிரச்சனை ஏற்படுகிறது. இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளது. அதாவது இன்றைய காலகட்டத்தில் உள்ள சுற்றுசூழல் மாசுபாடு மற்றும் நமது முறையற்ற உணவுப்பழக்கங்கள். எனவே தான் இன்றைய காலகட்டத்தில் அனைவருமே தங்களது தினசரி உணவில் ஆரோக்கியமான உணவினை எடுத்து கொள்ள வேண்டும் என்று நினைக்கின்றார்கள். ஆனால் சிறிய குழந்தைகளுக்கு நமது உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கும் உணவுகளை கண்டாலே பிடிக்காது. அப்படி பிடிக்காத பல உணவுகளில் ஒன்று தான் இந்த கேரட். இதனை பார்த்தாலே ஒரு சில குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு பிடிக்கவே பிடிக்காது. அப்படிப்பட்டவர்கள் உதவும் வகையில் தான் இன்றைய பதிவில் நமது உடலுக்கு பலவகையான நன்மைகளை செய்கின்ற கேரட்டில் பாயாசம் செய்வது எப்படி என்பதை பற்றி தான் விரிவாக காண இருக்கின்றோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து இந்த கேரட் பாயாசம் செய்வது எப்படி என்பதை பற்றி அறிந்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
கேரட் பாயாசம் செய்வது எப்படி..?
நமது உடலுக்கு பலவகையான நன்மைகளை செய்கின்ற கேரட்டில் பாயாசம் செய்வது எப்படி என்பதை பற்றி விரிவாக காணலாம் வாங்க. முதலில் இந்த ரெசிபிக்கு தேவையான பொருட்களை பற்றி காணலாம்.
- கேரட் – 2
- கேரட் துருவல் – 1/2 கப்
- பாதாம் – 8
- முந்திரி – 8
- உலர்திராட்சை – 6
- ஏலக்காய் – 2
- பால் – 2 1/4 கப்
- நெய் – 1 டேபிள் ஸ்பூன்
- சர்க்கரை – 1/4 கப்
- குங்குமப்பூ – 1 சிட்டிகை
Non Veg-யே மிஞ்சிடும் சுவையில் Veg Chicken நக்கெட்ஸ் செய்வது எப்படி
செய்முறை:
ஸ்டேப் – 1
முதலில் நாம் எடுத்து வைத்துள்ள 2 கேரட்டை நன்கு சுத்தம் செய்துவிட்டு சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் 3 பாதாம், 3 முந்திரி, 2 ஏலக்காய் மற்றும் 1/4 கப் பால் ஆகியவற்றை சேர்த்து நன்கு பசைபோல் அரைத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 2
பின்னர் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய்யை சேர்த்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 5 பாதாம், 5 முந்திரி, 6 உலர்திராட்சை மற்றும் 1/2 கப் கேரட் துருவலை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள்.
புரட்டாசி வந்துடுச்சு கறி குழம்பு சாப்பிடணும் போல இருக்கா அப்போ இந்த குழம்பு வச்சு சாப்பிடுங்க
ஸ்டேப் – 3
அடுத்து அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் 2 கப் பாலினை சேர்த்து நன்கு கொதிக்கவிடுங்கள். பிறகு அதனுடன் நாம் முன்னேரே அரைத்து வைத்துள்ள பசையை சேர்த்து நன்கு கொதிக்கவிடுங்கள்.
ஸ்டேப் – 4
பிறகு அதில் 1/4 கப் சர்க்கரை மற்றும் நாம் வதக்கி வைத்துள்ள கலவையை சேர்த்து நன்கு கொதிக்கவிடுங்கள். இது நன்கு கொதித்த உடன் 1 சிட்டிகை குங்குமப்பூவை சேர்த்து இறக்கினால் நாமத்து சுவையான கேரட் பாயாசம் தயாராகிவிட்டது.
வாங்க சுவைக்கலாம்.. நிங்களும் இதனை உங்கள் வீட்டில் செய்து சுவைத்து பாருங்கள்.
தேங்காய் லட்டுவை இப்படி ஒரு முறை செய்து பாருங்க டேஸ்ட் நாவைவிட்டு நீங்காது
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |