Carrot Rice Recipe in Tamil
பள்ளியில் படிக்கும் குழந்தைகள் மற்றும் வேலைக்கு செல்லும் கணவருக்கு மதிய உணவு பிரிபேர் செய்து கொடுப்பது பெரிய வேலையாக இருக்கும். தினமும் ஒரே மாதிரியாக செய்து கொடுத்தால் சாப்பிட மாட்டார்கள். தினமும் வேரெட்டியாக செய்து கொடுத்தால் தான் விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் தினமும் என்ன தான் வித்தியாசமாக செய்து கொடுப்பது என்று யோசித்து கொண்டிருப்பார்கள். அதனால் தான் நம் பதிவில் ஈசியான முறையில் லன்ச் ப்ரீபார் பற்றி பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் பதிவில் 10 நிமிடத்தில் ஈசியான முறையில் மதிய உணவு ஒன்றை பற்றி பார்ப்போம் வாங்க..
கேரட் சாதம் செய்ய தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை
தேவையான பொருட்கள் |
செய்முறை |
கேரட்- 2 |
முதலில் வெங்காயத்தை சிறியதாக நறுக்கி கொள்ளவும். பின் பச்சை மிளகையும் சிறியதாக நறுக்கி கொள்ளவும். கேரட்டை சிறியதாக சீவி கொள்ளவும். |
இஞ்சி, பூண்டு பேஸ்ட்- 1 தேக்கரண்டி |
உங்களுக்கு தேவையான அளவு அரிசி எடுத்து சாதமாக வைத்திருக்க வேண்டும். சாதமானது குழைவாக இருக்க கூடாது, உதிரி உதிரியாக இருக்க வேண்டும். |
மிளகு தூள்- 1/2 தேக்கரண்டி |
அடுத்து ஒரு கடாய் எடுத்து அதில் எண்ணெய் ஊற்றி கொள்ளவும், எண்ணெய் சூடானதும் நறுக்கி வைத்த வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி கொள்ளவும். |
சீரக தூள்- 1/2 தேக்கரண்டி |
வெங்காயம் சிவந்த நிறம் வந்த பிறகு இஞ்சிபூண்டு பேஸ்ட், மிளகு தூள், சீரக தூள் சேர்த்து வதக்க வேண்டும். |
பச்சை மிளகாய்- 2 |
பின் அதனுடன் கேரட்டையும் சேர்த்து வதக்க வேண்டும். இதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் தெளித்து விட்டு வேக விட வேண்டும். |
வெங்காயம்-2 |
கேரட் வெந்த பிறகு இதனை சாதத்துடன் சேர்த்து கிளற வேண்டும். கொஞ்சம் எண்ணெய் சேர்த்து கூட கிளறி விடலாம். |
எண்ணெய்- 5 தேக்கரண்டி |
இந்த ரெசிபியை ஒரு முறை செஞ்சு கொடுங்க உங்க குழந்தைகளுக்கு அப்புறம் அடிக்கடி செய்ய சொல்லுவாங்க. |
குழந்தைகளுக்கு இந்த மாதிரி பூண்டு சட்னி செய்து கொடுங்கள்
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> |
சமையல் குறிப்புகள்!!! |