சுவையான மற்றும் சூப்பரான காலிஃபிளவர் பராத்தா செய்முறை விளக்கம்..!

Advertisement

Cauliflower Paratha Recipe in Tamil

பெரும்பாலான வீடுகளில் காலை மற்றும் மாலை என இரண்டு வேலையிலும் இட்லி மற்றும் தோசை என இந்த இரண்டு வகையான ரெசிபிகளை தான் செய்கிறார்கள். அப்படி பார்த்தால் ஒரு நாள் ஏன் ஒரு வேளைக்கு இட்லி மாவு அல்லது தோசை மாவு இல்லை என்றால் என்ன சாப்பாடு செய்வது என்று தெரியாமலே குழப்பத்தில் இருப்பார்கள். இவை இரண்டும் செய்வது மிகவும் ஈஸி என்று நினைத்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது தான் கிடையாது.

ஏனென்றால் இட்லி அல்லது தோசை செய்ய வேண்டும் என்றால் முதலில் அரிசி மற்றும் உளுந்தை நீரில் நன்றாக ஊற வைத்து அதன் பின்னரே மாவு அரைக்க வேண்டும். ஆகவே இட்லி தோசை இல்லாமல் இன்னும் பல வகையான ரெசிபிகள் மிகவும் எளிமையான முறையில் செய்யக்கூடியவையாக இருந்து கொண்டு தான் இருக்கிறது. அதனால் இன்று காலிஃபிளவர் பராத்தா செய்வது எப்படி என்பதை தான் பார்க்கப்போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

காலிஃபிளவர் பராத்தா செய்வது எப்படி..?

பொருட்களின் அளவு  காலிஃபிளவர் பராத்தா செய்முறை விளக்கம் 
கோதுமை மாவு- 1 1/2 கப் முதலில் ஒரு பவுலில் இந்த மூன்று பொருளையும் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக மாவினை பிசைந்து அப்படியே வைத்து விடுங்கள்.
எண்ணெய்- 2 ஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
காலிபிளவர்- 1/2 இப்போது காலிபிளவரை சிபிஸ் சீவும் கட்டையில் நன்றாக பொடிப்பொடியாக சீவிக்கொள்ளுங்கள்.
ப.மிளகாய்- 2 அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அதில் நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம் மற்றும் துருவிய காலிபிளவர் என அனைத்தையும் நன்றாக வதக்கி கொள்ளுங்கள்.
இஞ்சி- சிறிது
வெங்காயம்- 1/2
மிளகாய் தூள்- 1 ஸ்பூன் 5 நிமிடம் கழித்து கடாயில் உள்ள பொருளுடன் எடுத்துவைத்துள்ள இந்த பொருளை எல்லாம் நன்றாக சேர்த்து அப்படியே 10 நிமிடம் வரை வேக விடுங்கள்.
மஞ்சள் தூள்- 1/2 ஸ்பூன்
மல்லித்தூள்- 1 ஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
எலுமிச்சை சாறு- 5 சொட்டு கடைசியாக 5 சொட்டு எலுமிச்சை சாறு மற்றும் கொத்தமல்லி சேர்த்து இறக்கி விடுங்கள்.
காலிஃபிளவர் பராத்தா செய்முறை அதன் பிறகு பிசைந்து வைத்துள்ள மாவில் இருந்து ஒரு உருண்டையை எடுத்துக்கொண்டு அதில் காலிபிளவர் மசாலாவை வைத்து மூடி விடுங்கள்.
காலிஃபிளவர் பராத்தா தயார் இப்போது நீங்கள் செய்து வைத்துள்ள உருண்டையை சப்பாத்தி போல் பொறுமையாக தேய்த்து தோசை கல்லில் சேர்த்து வேக விட்டு எடுத்தால் காலிஃபிளவர் பராத்தா தயார்.

butter chicken seimurai

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்!!!
Advertisement