வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

தேங்காய் இல்லாத சப்பாத்தி குருமா செய்வது எப்படி?

Updated On: June 1, 2023 10:24 AM
Follow Us:
Chapathi Kurma Without Coconut in Tamil
---Advertisement---
Advertisement

தேங்காய் இல்லாத சப்பாத்தி குருமா செய்வது எப்படி? Chapathi Kurma Without Coconut in Tamil..!

ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. இன்று நாம் ஒரு அருமையான ரெசிபி செய்முறையை பற்றி தான் படித்தறிய போகிறோம். பொதுவாக சப்பாத்தியை நாம் காலை, மாலை, இரவு என்று அனைத்து நேரங்களிலும் சாப்பிடலாம். அதேபோல் சப்பாத்தியை பெருபாலும் பலர் சாப்பிடக்கூடிய உணவாக இருக்கும். அதற்கு காரணம் இரண்டு வகை உள்ளது ஒன்று ஒரு சிலருக்கு அதனுடைய சுவை பிடித்திருக்கும் அதனால் அனைத்தை விரும்பி சாப்பிடுவார்கள். இரண்டாவது வகை என்னவென்றால் உடல் எடையை குறைக்க டயட் பாலோ செய்பவர்களின் உணவு பட்டியலில் கண்டிப்பாக சப்பாத்தி முதல் இடத்தை பெற்றிருக்கும். இதன் காரணமாக பலரது உணவு பட்டியலில் சப்பாத்தி இடம் பிடித்திருக்கும். அப்படி சப்பாத்தியை விரும்பி சாப்பிடுபவர்களுக்கு மிகவும் பயனளிக்கும் வகையில் இன்று நாம் சப்பாத்திக்கு சைடிஷாக தேங்காய் இல்லாமல் சப்பாத்தி குருமா செய்வது எப்படி என்று இப்பொழுது நாம் படித்தறிய போகிறோம். சரி வாங்க இந்த சப்பாத்தி குருமா செய்வது எப்படி என்று இப்பொழுது பார்க்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

தேவையான பொருட்கள்:

  • எண்ணெய் – இரண்டு டேபிள் ஸ்பூன்
  • கடுகு – ¼ டீஸ்பூன்
  • பச்சை மிளகாய் – இரண்டு நீளவாக்கில் கீறியது
  • பெரிய வெங்காயம் – ஒன்று நீளவாக்கில் நறுக்கியது
  • தக்காளி – ஒன்று நீளவாக்கில் நறுக்கியது
  • கரம்மசாலா – ½ ஸ்பூன்
  • மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
  • மல்லி தூள் – 1½ ஸ்பூன்

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கொண்டக்கடலை வடை செய்வது எப்படி என்பதை பார்ப்போம்…!

மசாலா அரைக்க தேவையான பொருட்கள்:

  • பூண்டு – ஐந்து பற்கள்
  • இஞ்சி – ஒரு சிறிய துண்டு
  • கிராம்பு – மூன்று
  • பட்டை – இரண்டு
  • கசகசா – ¼ டீஸ்பூன்
  • முந்திரி பருப்பு – இரண்டு
  • சோம்பு – இரண்டு ஸ்பூன்
  • பொட்டுக்கடலை – இரண்டு டேபிள்ஸ்பூன்

சப்பாத்தி குருமா செய்முறை:

மசாலா அரைக்க மேல் கூறப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி நைசாக அரைத்துக்கொள்ளுங்கள்.

பிறகு அடுப்பில் ஒரு குக்கரை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் கடுகு செய்து தாளிக்கவும்.

பின் அதனுடன் நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய், வெங்காயம் ஆகியவற்றை செய்து நன்றாக வதக்க வேண்டும்.

வெங்காயம் நன்று வதங்கி வந்ததும் நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து வதக்கவும்.

தக்காளி நன்கு வதங்கி எண்ணெய் பிரிந்து வரும்போது மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக அந்த எண்ணெயிலேயே வதக்கவும்.

பின் அரைத்து வைத்துள்ள மசாலாவை இந்த சமயத்தில் சேர்த்து ஒரு முறை வதக்க வேண்டும்.

பின்பு தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கலந்துவிடவும்.

பிறகு குக்கரை மூடி இரண்டு விசில் விட்டு வேகவைக்க வேண்டும்.

இரண்டு விசில் வந்த பிறகு அடுப்பை அணைத்து குக்கரில் உள்ள பிரஷர் அடங்கும் வரை காத்திருக்கவும். பின் குக்கரை திறந்து அதில் பொடிதாக நறுக்கிய கொத்தமல்லி இலை மற்றும் புதினா சேர்த்து கிளறினால் தேங்காய் சேர்க்காத ஹெல்த்தியான மற்றும் சுவையான சப்பாத்தி குருமா தயார்.

இந்த குருமாவை சப்பாத்தி மட்டும் இல்லாமல் பூரி, இட்லி, தோசை போன்ற உணவுகளுக்கு தொட்டுக்கொள்ளவும் மிகவும் சுவையாக இருக்கும். கண்டிப்பாக உங்கள் வீட்டில் ட்ரை செய்து பாருங்கள் நன்றி வணக்கம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இட்லி, சப்பாத்திக்கு சாப்பிடக் கூடிய பீர்க்கங்காய் கிரேவி செய்யலாம் வாங்க…!

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal Kurippugal
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now