Chettinad Chicken Gravy Recipe
நாம் தினமும் சாப்பிடும் சாப்பிட்டினை பொறுத்தவரை சைவம் மற்றும் அசைவம் என்று இரண்டே வகைகள் தான் உள்ளது. இந்த இரண்டடில் நாம் பெரும்பாலும் விரும்புவது அசைவ சாப்பாட்டினை தான். அதிலும் குறிப்பாக சிக்கனில் என்ன ரெசிபி செய்து வைத்தாலும் கொஞ்சம் கூட மறுக்காமல் சாப்பிட்டு விடுவோம். இப்படி இருக்கும்பட்சத்தில் சிலருக்கு காரைக்குடி ஸ்பெஷல் எதுவாக இருந்தாலும் அதிகமாக பிடிக்கும். ஆனால் அத்தகைய ரெசிபியை வீட்டில் செய்தால் அதே மாதிரியான சுவையில் இல்லை என்று கூறுவார்கள். அதனால் இன்று கொஞ்சம் கூட சுவை மாறாமல் செட்டிநாடு சிக்கன் கிரேவி செய்வது எப்படி என்று தான் பார்க்கப்போகிறோம்.
| உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
சிக்கன் கிரேவி செய்ய தேவையான பொருட்கள்:
- சிக்கன்- 1 கிலோ
- வெங்காயம்- 3
- தக்காளி- 4
- மிளகு- 1/4
- கிராம்பு- 2
- பட்டை- 2
- சோம்பு- 1/4 ஸ்பூன்
- கல் பாசி- சிறிதளவு
- மஞ்சள்தூள்- 1/2 ஸ்பூன்
- மிளகாய் தூள்- 3/4 ஸ்பூன்
- மல்லித்தூள்- 3/4 ஸ்பூன்
- இஞ்சி பூண்டு பேஸ்ட்- 2 ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- எண்ணெய்- தேவையான அளவு
- கறிவேப்பிலை- தேவையான அளவு
- கொத்தமல்லி- தேவையான அளவு
மசாலா அரைக்க தேவையான பொருட்கள்:
- காய்ந்த மிளகாய்- 10
- சோம்பு- 1/2 ஸ்பூன்
- மல்லி- 3/4 ஸ்பூன்
- சீரகம்- 1/4 ஸ்பூன்
- மிளகு- 1/4 ஸ்பூன்
- பட்டை- 1
- கிராம்பு- 1
- துருவிய தேங்காய்- 1 கப்
அப்பப்பா செட்டிநாடு சிக்கன் சுக்கா இப்படி செஞ்சா போதும் சுவை வேற லெவல்ல இருக்கும்
செட்டிநாடு சிக்கன் கிரேவி செய்வது எப்படி..?
முதலில் எடுத்துவைத்துள்ள சிக்கன், வெங்காயம் மற்றும் தக்காளி ஆகியவற்றை நன்றாக அலசி நறுக்கி வைத்து கொள்ளுங்கள்.
அதன் பிறகு அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் வறுத்து மசாலா அரைக்க எடுத்துவைத்துள்ள பொருட்களை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளுங்கள்.

பின்பு அதனுடன் துருவிய தேங்காயினையும் சேர்த்து 10 நிமிடம் வரை வதக்கி கொள்ளுங்கள். இப்போது வதக்கிய பொருட்களை ஆற வைத்து மிக்சி ஜாரில் சேர்த்து நன்றாக பேஸ்ட் போல அரைத்து விடுங்கள்.
இப்போது அடுப்பில் மற்றொரு கடாயினை வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து எண்ணெயினை காய விடுங்கள். அதன் பிறகு எடுத்துவைத்துள்ள சீரகம், பட்டை, சோம்பு, நறுக்கிய வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட்டினை சேர்த்து நன்றாக 5 நிமிடம் வதக்கி கொள்ளுங்கள்.
5 நிமிடம் கழித்த பிறகு நறுக்கிய தக்காளியினையும் சேர்த்து 2 நிமிடம் வதக்கி கொண்டு பின்பு இதனுடன் மிளகாய் தூள் 3/4 ஸ்பூன், மல்லித்தூள் 3/4 ஸ்பூன், மஞ்சள்தூள் 1/2 ஸ்பூன் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக ஒன்றோடு ஒன்று சேரும் வரை கலந்து கொள்ளுங்கள்.
கடைசியாக அடுப்பில் உள்ள பொருளுடன் 1 கிலோ நறுக்கிய சிக்கன் மற்றும் அரைத்து வைத்துள்ள மாசாலா பேஸ்ட்டை சேர்த்து மீண்டும் கலந்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக சிக்கனை வேக விடுங்கள்.
சிக்கன் வெந்த பிறகு அதன் மேலே கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இலையினை சேர்த்து இறக்கினால் போதும் இட்லி, தோசை மற்றும் சப்பாத்திக்கு சைடிஸ்ஸாக சுவையான செட்டிநாடு சிக்கன் கிரேவி தயார்.
செட்டிநாடு மட்டன் கிரேவி சுவையாக இப்படி ஒருமுறை செய்து பாருங்கள்
| இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |














