தாறுமாறான சுவையில் செட்டிநாடு மீன் குழம்பு வைக்க தெரியலையா..! அப்போ வாங்க தெரிஞ்சுக்கலாம் …!

Advertisement

Chettinad Fish Kulambu Recipe 

நாம் அனைவரும் கெண்டை மீன் குழம்பு, கெளுத்தி மீன், விறால் மீன், சிலேப்பி மீன் மற்றும் கானாங்கெளுத்தி மீன் என்று நிறைய வகையான மீன் குழம்பு வீட்டில் செய்து சாப்பிட்டு இருப்போம். என்ன தான் நம்முடைய வீட்டில் சுவையான மீன் குழம்பு வைத்தாலும் கூட சாப்பாட்டிற்கு புகழ்பெற்ற செட்டிநாடு சுவைக்கு ஈடாக முடியாது. அதனால் இன்று தாறுமாறான சுவையில் செட்டிநாடு மீன் குழம்பு வீடே மணமணக்கும் வகையில் மீன் குழம்பு செய்வது எப்படி என்று தெரிந்துக்கொள்ள போகிறோம். சரி வாங்க நேரத்தை வீணடிக்காமல் மீன் குழம்பு செய்ய போகலாம்..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

மீன் குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:

  1. மீன்- 1 கிலோ 
  2. மிளகாய் தூள்- 2 ஸ்பூன் 
  3. மஞ்சள்தூள்- 1/4 ஸ்பூன் 
  4. கடுகு- 1/4 ஸ்பூன் 
  5. புளி- சிறிதளவு 
  6. சின்ன வெங்காயம்- 100 கிராம் 
  7. பூண்டு- 10 பல் 
  8. உப்பு- தேவையான அளவு 
  9. எண்ணெய்- தேவையான அளவு 
  10. கறிவேப்பிலை- சிறிதளவு  

வறுத்து அரைக்க தேவையான பொருட்கள்:

  • காய்ந்த மிளகாய்- 3
  • தக்காளி- 3
  • சின்ன வெங்காயம்- 100 கிராம் 
  • தேங்காய்- 1 மூடி 
  • சீரகம்- 3/4 ஸ்பூன் 
  • மல்லி- 1 ஸ்பூன் 
  • மிளகு- 1 ஸ்பூன் 
  • சீரகம்- 3/4 ஸ்பூன் 
  • மஞ்சள்தூள்- 1/4 ஸ்பூன் 
  • இஞ்சி- சிறிய துண்டு 
  • பூண்டு- 10 பல் 
  • தேங்காய்- 1 மூடி 

Recipes👇👇  மீன் குழம்பு வைத்து சாப்பிட்டுருப்பீர்கள்..ஆனால் மீன் குருமா சாப்பிட்ருக்கீர்களா..

செட்டிநாடு மீன் குழம்பு செய்வது எப்படி..?

முதலில் வாங்கி வைத்துள்ள மீனை சுத்தம் செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு எடுத்து வைத்துள்ள தக்காளி, வெங்காயம் ஆகியவற்றை நறுக்கி வைத்து கொள்ளுங்கள். பின்பு தேங்காய் துருவி வைத்து கொள்ளுங்கள்.

இப்போது எடுத்துவைத்துள்ள புளியினை தண்ணீர் சேர்த்து ஊறவைத்து புளி கரைசல் தயார் செய்து கொள்ளுங்கள்.

chettinad fish curry in tamil

அதன் பிறகு அடுப்பை பற்றவைத்து அதில் ஒரு கடாயை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அதில் மசாலா அரைக்க எடுத்து வைத்துள்ள பொருட்கள் மற்றும் துருவிய தேங்காய் இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக 10 முதல் 15 நிமிடம் வரை வதக்கி கொள்ளுங்கள். பின்பு வதக்கிய பொருட்களை ஆறவைத்து மிக்சி ஜாரில் சேர்த்து மசாலா பதத்திற்கு அரைத்து விடுங்கள்.

அடுத்து அடுப்பில் ஒரு கடையினை வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்த கடுகு பொரிந்தவுடன் நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயம், தக்காளி மற்றும் 1/4 மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக பொன் நிறமாக 5 நிமிடம் வதக்கி கொள்ளுங்கள்.

5 நிமிடம் கழித்த பிறகு கடாயில் உள்ள பொருளுடன் மிளகாய் தூள் 2 ஸ்பூன், உப்பு தேவையான அளவு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடுங்கள்.

சிறிது நேரம் கழித்த பிறகு மீண்டும் மீன் குழம்பிற்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடுங்கள். அதன் பின்பு கடாயில் உள்ள குழம்பு கொதித்தவுடன் அதில் அரைத்து வைத்துள்ள மசாலா, புளி கரைசல் இரண்டினையும் சேர்த்து மீண்டும் நன்றாக 10 நிமிடம் கொதிக்க விடுங்கள்.

கடைசியாக 10 நிமிடம் கழித்த பிறகு சுத்தம் செய்து வைத்துள்ள மீனை சேர்த்து 5 நிமிடம் கழித்து குழம்பின் மீது கறிவேப்பிலை சேர்த்து இறக்கினால் போதும் சுவையான செட்டிநாடு மீன் குழம்பு ரெடி.

அவ்வளவு தான் செட்டிநாடு மீன் குழம்பு செய்முறை பார்த்தால் மட்டும் போதாது உடனே வீட்டில் செய்து சாப்பிட்டு பாருங்கள் சுவை தாறுமாறா இருக்கும்.

Recipes👇👇 வீடே மணக்கும் அளவிற்கு கிராமத்து நெத்திலி மீன் குழம்பு செய்வது எப்படி

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil
Advertisement