Chettinad Mor Kulambu Recipe in Tamil
பொதுவாக சைவ பிரியர்களுக்கு மோர் குழம்பு என்றால் பிடிக்கும். இதனை ஊருக்கு ஊரில் வெவ்வேறு மாதிரியாக வைப்பார்கள். ஏன் நீங்கள் ஒரு மாதிரியாக வைப்பீர்கள், அம்மா ஒரு மாதிரியாக வைப்பார்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு டேஸ்ட்டாக இருக்கும். அதனால் தான் நம் பதிவில் ஒவ்வொரு ஊர்களில் உள்ள ஸ்டைலில் உணவு செய்வது எப்படி என்று பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் செட்டிநாடு மோர் குழம்பு வைப்பது எப்படி என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
செட்டிநாடு மோர் குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:
- துவரப்பருப்பு- 1 தேக்கரண்டி
- அரிசி- 1 தேக்கரண்டி
- சீரகம்- 1 தேக்கரண்டி
- தேங்காய்- ஒரு கப்
- இஞ்சி- 1 தேக்கரண்டி
- சீரகம்-1 தேக்கரண்டி
- பச்சை மிளகாய்-1
- கருவேப்பிலை- சிறிதளவு
- மோர்- ஒரு கப்
- தேங்காய் எண்ணெய்- 1 தேக்கரண்டி
- வெண்டைக்காய்-10
- மோர்- ஒரு கப்
- கடுகு-
- வெந்தயம்- 1/4 தேக்கரண்டி
- காய்ந்த மிளகாய்- 1
செட்டிநாடு மோர் குழம்பு செய்முறை:
முதலில் ஒரு கிண்ணத்தில் 1 தேக்கரண்டி துவரப்பருப்பு, 1 தேக்கரண்டி அரிசி, 1 தேக்கரண்டி மல்லி, 1 தேக்கரண்டி சீரகம் மற்றும் தண்ணீர் சேர்த்து 15 நிமிடம் ஊற வைத்து கொள்ளவும்.
அதன் பிறகு மிக்சி ஜாரை எடுத்து ஊற வைத்த பொருட்களை சேர்த்து கொள்ளவும். அதனுடன் 1/4 கப் திருகிய தேங்காய், இஞ்சி சிறிதளவு, பச்சை மிளகாய் 1, கருவேப்பிலை சிறிதளவு சேர்த்து பேஸ்ட்டாக அரைத்து கொள்ளவும்.
செட்டிநாடு மீன் வறுவல் செய்முறை
ஒரு பவுலில் அரைத்து வைத்த பேஸ்ட், மோர் ஒரு கப் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும்.
அடுத்து அடுப்பில் கடாய் வைத்து அதில் தேங்காய் எண்ணெய் 1 தேக்கரண்டி நறுக்கி வைத்த வெண்டைக்காய் சேர்த்து வதக்கி தனியாக எடுத்து கொள்ளவும்.
பின்பு அதே கடாயில் தேங்காய் எண்ணெய் 1 தேக்கரண்டி சேர்த்து சூடானதும், 1 தேக்கரண்டி கடுகு, வெந்தயம் 1/4 தேக்கரண்டி, காய்ந்த மிளகாய் ஒன்று, பெருங்காய தூள் சிறிதளவு, கருவேப்பிலை சிறிதளவு, மஞ்சள் தூள் 1/4 தேக்கரண்டி சேர்த்து வதக்கி கொள்ளவும்.
அதனுடன் மிக்ஸ் செய்து வைத்துள்ள மோர் மற்றும் வதக்கி வைத்த வெண்டைக்காய் இரண்டையும் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.
செட்டிநாடு நண்டு குழம்பு செய்வது எப்படி
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |