Chettinad Potato Fry Recipe
தினமும் நம்முடைய வீட்டில் என்ன தான் வித விதமாக சமையல் செய்து வைத்து இருந்தாலும் கூட உருளைக்கிழங்கு வறுவல் இருந்தால் இன்னும் திருப்தியாக இருக்கும் என்று தான் நாம் நினைப்போம். ஏனென்றால் உருளைக்கிழங்கு வறுவல் என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு உணவாக உள்ளது. ஆனால் நம்முடைய வீட்டில் எப்போதும் ஒரே மாதிரியான உருளைக்கிழங்கு வறுவல் தான் செய்து வருகிறோம். அதனால் இன்று உணவிற்கு மிகவும் பெயர் பெற்ற காரைக்குடி ஸ்பெஷல் உருளைக்கிழங்கு வறுவல் செய்வது எப்படி என்பதை தான் பார்க்கப்போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
உருளைக்கிழங்கு வறுவல் செய்ய தேவையான பொருட்கள்:
- பொடி உருளைக்கிழங்கு- 250 கிராம்
- சீரகம்- 1 ஸ்பூன்
- கடுகு- 1 ஸ்பூன்
- வெங்காயம்- 1
- தக்காளி- 1
- உப்பு- தேவையான அளவு
- சமையல் எண்ணெய்- தேவையான அளவு
மசாலா அரைக்க தேவையான பொருட்கள்:
- மிளகு- 1 ஸ்பூன்
- சீரகம்- 1 ஸ்பூன்
- மல்லி- 1 ஸ்பூன்
- கறிவேப்பிலை- சிறிதளவு
- காய்ந்த மிளகாய்- 5
- துருவிய தேங்காய்- 2 ஸ்பூன் அளவு
முதலில் மேலே சொல்லப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தினையும் நன்றாக கடாயில் எண்ணெய் சேர்த்து பின்பு மிக்சி ஜாரில் போட்டு பவுடர் போல அரைக்க வேண்டும். இப்போது மசாலா பவுடர் தயார்.
மோர் குழம்புன்னா அது செட்டிநாடு மோர் குழம்பு தாங்க..
செட்டிநாடு உருளைக்கிழங்கு வறுவல்:
நீங்கள் எடுத்துவைத்துள்ள 250 கிராம் பொடி உருளையினை வேக வைத்து தோல் உரித்து வைத்து விடுங்கள். பின்பு எடுத்து வைத்துள்ள தக்காளி மற்றும் வெங்கயத்தை பொடியாக நறுக்கி வைய்யுங்கள்.
அதன் பிறகு கடாயில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்தவுடன் கடுகு மற்றும் சீரகத்தை சேர்த்து பொரிய விடுங்கள். பின்பு அதனுடன் நறுக்கிய தக்காளி மற்றும் வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளுங்கள்.
இப்போது கடாயில் உள்ள பொருளுடன் வேக வைத்து எடுத்துவைத்துள்ள உருளைக்கிழங்கினை சேர்த்து ஒன்றோடு ஒன்று சேரும் வரை கரண்டியால் 5 நிமிடம் கிண்டி விடுங்கள்.
கடைசியாக 5 நிமிடம் கழித்து தயார் செய்து வைத்துள்ள மசாலா பேஸ்டை உருளை கிழங்குடன் சேர்த்து நன்றாக கலந்து சிறிது தண்ணீர் சேர்த்து அடுப்பை சிமிமில் வைத்து விடுங்கள்.
அப்படியே 10 முதல் 15 நிமிடம் அடிபிடிக்காதவாறு பார்த்து இறக்கினால் போதும் காரசாரமான உருளைக்கிழங்கு அதுவும் செட்டிநாடு உருளைக்கிழங்கு வறுவல் தயார்.
மறக்காம இன்னிக்கே இந்த ரெசிபியை வீட்டில் செய்து டேஸ்ட் எப்படி இருக்குனு பாருங்க.
செட்டிநாடு மீன் வறுவல் செய்முறை
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |