மீன் வாங்கின ஒரு முறை இப்படி செஞ்சு பாருங்க… செட்டிநாட்டு சுறா புட்டு

Advertisement

செட்டிநாடு சுறா புட்டு 

புரட்டாசி முடிச்சிடுச்சி இனி அசைவம் தூள் கிளப்புவீங்க..தினம் தினம் புது புது வெரைட்டியா சமைக்க தோணும். ஆன என்ன வெரைட்டி பண்ணுறது. அதுவும் மீன் எடுத்த ஒன்னு குழம்பு இல்ல வறுவல் இதைத்தானே செய்வீங்க. இப்படி சமைச்சி சாப்பிட்டால் கண்டிப்பா நமக்கு மீன் சாப்பிடவே பிடிக்காது. ஆன மீனில்  அதிக சத்துக்கள் உள்ளது. மீனை முள் எடுத்து சாப்பிடுவது பெரும்பாலான மக்களுக்கு பிடிக்காத ஒரு செயலக இருக்கும். அதனாலே மீன் சமைப்பது சாப்பிடுவதையும் குறைத்து இருப்பிங்க. இன்றைய பதிவில் மீனில் ஒரு சுவையான புட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த உணவாக இருக்கும். வாங்க பதிவிற்கு செல்லலாம்.

சுறா புட்டு செய்வது எப்படி ?

sura puttu

தேவையான பொருட்கள்:

மீன் – 250 கிராம்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 3 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1/4 தேக்கரண்டி
கடுகு – 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிதளவு
இஞ்சி, கிராம்பு, பூண்டு – 5
பச்சை மிளகாய்
வெங்காயம் – 3 பெரியது
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
மிளகு தூள் – 1/2 தேக்கரண்டி

சுறா புட்டு செய்முறை:

chettinad sura puttu

மீன் துண்டு நன்றாக சுத்தம் செய்த பின்னர், உப்பு சேர்த்து 10 நிமிடம் ஊறவைக்கவும்.

பின்னர் மீனில் சிறிதளவு தண்ணீர் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து மிதமான தீயில் 10 நிமிடம் வேக வைக்கவும்.

மின்னார் மீன்களை நீரில் இருந்து எடுத்து அதன் தோல்களை அகற்றவும். தோல்களை அகற்றிய பின்னர் மீன் இறைச்சியை உதிர்த்து கொள்ளவும்.

பின்னர் ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கி, உளுத்தம்பருப்பு, கடுகு, கறிவேப்பிலை கிராம்பு சேர்த்து வதக்கவும். பின்னர் அதனுடன் இஞ்சி பூண்டு கலவையை சேர்த்து வதக்கவும். பின்னர் அதனுடன்  சேர்க்கவும். நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து பச்சை தன்மை போகும் வரை வதக்கவும்.

பின்னர் அதில் மஞ்சள் தூள், மிளகு தூள்களை சேர்த்துக்கொள்ளவும். பின்னர் சிறிதளவு உப்பு சேர்த்து மிதமான வெப்பத்தில் 4 முதல் 5 நிமிடங்கள் சமைக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கிய பின்னர் மீன் இறைச்சியை அந்த கலவையில் சேர்த்துக்கொள்ளவும். மீன் இறைச்சியை மசாலாக்களுடன் நன்றாக கிளறவும். மீன்னை மெதுவான வெப்பத்தில் சமைக்க வேண்டும்.

மீனுடன் மசாலாக்கள் நன்றாக ஒட்டிக்கொள்ளும் வரை கிளறவும். இப்போது சுவையான சுறா புட்டு ரெடி.

இதனை நீங்கள் ஒரு சிறந்த side dish உணவாக சாதம் மற்றும் கறியுடன் பரிமாறலாம்.

மீன் குழம்பு சுவையில் சுவையான வாழைப்பூ குழம்பு…

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal Kurippugal
Advertisement