Chettinad Thakkali Pachadi in Tamil
வீட்டில் என்னதான் விதவிதமான காய்கறிகள் இருந்தாலும் பசித்த நேரத்திற்கு உடனே ஒரு உணவு செய்து சாப்பிட தக்காளியும் வெங்காயமும் இருந்தால் போதும்.. அதை வைத்து சூப்பராக சமைத்து விடலாம். எந்தவொரு உணவாக இருந்தாலும் அதில் முதலிடத்தில் இருப்பது தக்காளிதான். எனவே இந்த தக்காளியை வைத்து பலவிதமான உணவுகள் செய்து சாப்பிட்டு இருப்பீர்கள்.. ஆனால், செட்டிநாடு தக்காளிக்காய் பச்சடி செய்து சாப்பிட்டு இருக்கிறீர்களா..? இல்லையென்றால் இப்பதிவில் உள்ள செட்டிநாடு தக்காளிக்காய் பச்சடி செய்முறையை படித்து நீங்களும் இதை செய்து பாருங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
தக்காளி பச்சடி செய்வது எப்படி.?
தேவையான பொருட்கள்:
- தக்காளிக்காய் – 200 கிராம்
- துவரம் பருப்பு – 1/2 கப்
- சின்ன வெங்காயம் – 8
- பச்சை மிளகாய் – 4
- புளி – நெல்லிக்காய் அளவு
- மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
தாளிப்பிற்கு தேவையான பொருட்கள்:
- கடுகு – 1/2 டீஸ்பூன்
- உளுத்தம்பருப்பு – 1/2 டீஸ்பூன்
- சோம்பு – 1/2 டீஸ்பூன்
- எண்ணெய் – 2 ஸ்பூன்
- கறிவேப்பிலை – 2 கொத்து
ரெஸ்டாரண்ட் சுவையில் தக்காளி சூப்…..
செட்டிநாடு தக்காளிக்காய் பச்சடி செய்முறை:
புளியை ஊறவைக்கவும்:
முதலில் புளியை அரை கப் தண்ணீரில் ஊறவைத்து கொள்ளுங்கள்.
துவரம் பருப்பை வேகவைக்கவும்:
அடுத்து, அடுப்பில் குக்கரை வைத்து துவரம் பருப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கொள்ளுங்கள். இதற்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து (பருப்பு குலையாத அளவிற்கு) 2 விசில் வரும் வரை வேகவைத்து எடுத்து கொள்ளுங்கள்.
வெங்காயத்தை நறுக்கி கொள்ளவும்:
பிறகு, வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாயினை பொடியாக நறுக்கி கொள்ளுங்கள். பின் ஊறவைத்த புளியையும் கரைத்து எடுத்து கொள்ளுங்கள்.
தாளிப்பு பொருட்களை சேர்க்கவும்:
இப்போது அடுப்பில் ஒரு கடாயை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி கொள்ளுங்கள். எண்ணெய் சூடானதும் அதில் தாளிப்பு தேவையான பொருட்களான கடுகு, உளுத்தம்பருப்பு மற்றும் சோம்பு சேர்த்து தாளியுங்கள்.
தக்காளியை சேர்க்கவும்:
பிறகு, இதில் நறுக்கி வைத்த வெங்காயம் தக்காளி மற்றும் பச்சைமிளகாயினை சேர்த்து வதக்கி கொள்ளுங்கள். வதங்கியதும் அதில் தக்காளியையும் சேர்த்து நன்கு வதக்கி விடுங்கள்.
அனைவருக்கும் பிடித்த தக்காளி சாம்பார் செய்வது எப்படி..?
5 நிமிடம் கொதிக்க வைக்கவும்:
இந்நிலையில் கரைத்து வைத்த புளி கரைசலை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடுங்கள். அதன் பிறகு, வேகவைத்து வைத்த பருப்பினை சேர்த்து மீண்டும் 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால் சுவையான தக்காளிக்காய் பச்சடி ரெடி..!
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |