Chicken Bhuna Masala Recipe in Tamil
அசைவ உணவு என்றாலே பெரும்பாலானவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். அதிலும் மட்டனை விட சிக்கனை தான் விரும்பி சாப்பிடுவார்கள். மூன்று வேலையும் சிக்கனை சமைத்து கொடுத்தாலும் சலிப்பு இல்லாமல் சாப்பிடுவார்கள். ஆனாலும் இதனை ஒரே மாதிரியாக குழம்பு, வறுவல், பிரியாணி என்று தான் சாப்பிட்ருப்பார்கள். இதனை வித்தியாசமாக செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். அதனால் இந்த பதிவில் சிக்கனை வைத்து அருமையான ரெசியை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க.
சிக்கன் பூனா மசாலா செய்ய தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை:
தேவையான பொருட்கள் |
செய்முறை |
சிக்கன்- 1/2 கிலோ |
முதலில் 1/2 கிலோ சிக்கனை கழுவி ஒரு பவுலில் எடுத்து கொள்ளவும், அதில் மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்ச தூள், சீரக தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், எலுமிச்சை சாறு சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும். இதனை 2 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். |
மிளகாய் தூள், மல்லி தூள் – 1 தேக்கரண்டி |
அடுத்து மசாலா செய்வதற்கு கடாய் வைத்து அதில் காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும், லேசாக சூடு வந்ததும் பூண்டு, மிளகு, சீரகம் சேர்த்து வதக்க வேண்டும். |
தக்காளி- 2 |
அடுத்து பாத்திரம் வைத்து எண்ணெய் ஊற்றி சோம்பு, நறுக்கிய பெரிய வெங்காயம், கருவேப்பிலை, உப்பு சேர்த்து வதக்க வேண்டும். |
மஞ்சள் தூள்- 1/2 தேக்கரண்டி |
அடுத்து இதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும். காஸ்மீரி மிளகாய் தூள், மல்லி தூள், பெருஞ்சீரக தூள் சேர்த்து வதக்க வேண்டும். |
வெங்காயம்- 2 |
பின் வதக்கி வைத்த மிளகாய் மற்றும் பூண்டு மிளகை சேர்த்து வதக்க வேண்டும். |
சீரக தூள்- 1 தேக்கரண்டி |
அடுத்து அதனுடன் சிறியதாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி சுருங்கி நன்றாக மசிய வேண்டும். எண்ணெய் பிரிந்த நிலை வரும் போது 1/2 கப் தயிர் சேர்த்து வதக்க வேண்டும். |
தயிர்- 1/4 கப் |
பின் இதில் ஊற வைத்த சிக்கனை சேர்த்து வதக்க வேண்டும். இதில் தண்ணீரை தெளித்து விட்டு வேக விட வேண்டும். |
எண்ணெய்- 100மில்லி லிட்டர் |
சிக்கன் வெந்த பிறகு கொத்தமல்லி இலையை தூவி இறக்கி பரிமாற வேண்டும். |
5 கிலோ சிக்கன் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள் எவ்வளவு தெரியுமா..?
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> |
சமையல் குறிப்புகள்!!! |