கொங்குநாட்டு ஸ்பெஷல் சிக்கன் சிந்தாமணி செய்வது எப்படி ?

Advertisement

சிக்கன் சிந்தாமணி 

அசைவ பிரியர்களின் விருப்ப தேர்வாக இருப்பது சிக்கன். சிக்கனில் பல விதமான உணவு வகைகள் உள்ளது. அதிலும் அசைவ பிரியர்களுக்கு மிகவும் பிடித்த சிக்கன் உணவாக இருப்பது சிக்கன் வறுவலாக தான் இருக்கும். அந்த சிக்கன் வறுவலில் ஆந்திர சிக்கன் வறுவல், ஆந்திரா ஸ்டைலில் சில்லி சிக்கன் கிரேவி என பல வகைகளில் செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். ஆனால் கொங்கு ஸ்பெஷல் சிக்கன் சிந்தாமணி கண்டிப்பாக சாப்பிட்டு இருக்க மாட்டீர்கள். சிக்கன் சிந்தாமணி என்ற பெயரே சற்று புதுமையாக இருக்கிறது அல்லவா, அதுபோல் இந்த சிக்கன் சிந்தமணி சுவையும் வேற லெவலில் இருக்கும். இன்றைய பதிவில் கோவை ஸ்பெஷல் சிக்கன் சிந்தாமணி செய்வது எப்படி என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Chicken Chinthamani Recipe in Tamil:

சிக்கன் சிந்தாமணி செய்ய

தேவையான பொருட்கள்:

chicken chintamani recipe

கோழி கறி – 1 Kg
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
உப்பு – 1/2 தேக்கரண்டி
எண்ணெய் – 3 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் செதில்கள் – 5 (விதைகள் நீங்கியது)
சின்ன வெங்காயம் – 150 கிராம்
கறிவேப்பிலை – சிறிதளவு
இஞ்சி பூண்டு விழுது – தேவையான அளவு
தேங்காய் துருவியது – தேவையான அளவு
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை – தேவையான அளவு

சிக்கன் சிந்தாமணி செய்முறை:

chicken chintamani receipe

முதலில் கோழி கறியை சுத்தம் செய்து அதில் சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து 30 முதல் 40 நிமிடம் வரை ஊறவைக்கவும்.

பின்னர் ஒரு தடிமனான பாத்திரத்தில் சிறிது எண்ணெயை சூடாக்கி, அதில் கறிவேப்பிலை, மிளகாய் தாள்கள் மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.

பின்னர் இவற்றுடன் தயாரித்து வைத்துள்ள கோழி கறியை சேர்த்து அதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.

இஞ்சி, பூண்டின் பச்சை தன்மை போகும் வரை நன்றாக வதக்கவும் பின்னர் தேவைக்கு ஏற்ப மிளகாய் தூள் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.

சிக்கன் நன்றாக வெந்ததும் துருவிய தேங்காய் சேர்த்து நன்றாக கிளறி சிறிது நேரம் வேக வைக்கவும்.

கடைசியாக நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து இறக்கினால் காரசாரமான கொங்கு நாடு ஸ்பெஷல் சிக்கன் சிந்தாமணி ரெடி.

ஆந்திரா ஸ்பெஷல் கொண்டா ரெட்டி சிக்கன் பிரியாணி செய்வது எப்படி

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil

 

Advertisement